Know the word TARNISHED...

Word of the day is TARNISHED...
Function
The word TARNISHED is an adjective.

Meaning
1) to become less bright அதாவது பிரகாசம் குறைந்துவிடுதல் என்று அர்த்தம்.

பொதுவாக புத்தம் புதிதாக இருக்கும் ஒரு பொருளானது அதிக பொலிவை கொண்டதாக இருக்கும், பிறரது கண்களை கவரக் கூடியதாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பக் கூடியதாக இருக்கும்.

ஆனால் அந்த பொருளானது நாளுக்கு நாள் அதனுடைய பொலிவை இழப்பது என்பது இயற்கையான ஒரு விஷயமாகும்.

இவ்வாறாக ஒரு பொருளானது அதனுடைய பொலிவை இழக்கும் பொழுது இந்த tarnished என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இது போன்றே ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ அதனுடைய நல்ல பெயரை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அது அதனுடைய தவறான செயல்களால் இருக்கலாம் அல்லது அதன் மீது பிறர் கொண்ட பொறாமையினாலும் இருக்கலாம்.

இவ்வாறாக ஒரு பொருளானது அதனுடைய பொலிவை இழக்கும் பொழுது பொலிவு இழந்த அல்லது பொலிவு மங்கிய என்ற அர்த்தத்தில் tarnished என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் அதே வேளையில் ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ அதனுடைய நல்ல பெயரை இழக்கும் பொழுது கெட்டுவிட்டது அல்லது களங்கப்பட்டது என்ற அர்த்தத்தில் tarnished என்ற இந்த வார்த்தையை தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
Generally people do not like to wear tarnished gold ornaments.
பொதுவாக பொலிவு இழந்த தங்க ஆபரணங்களை அணிவதை மக்கள் விரும்புவதில்லை.

The company's good reputation is tarnished.
நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிட்டது.

His good reputation is tarnished.
அவனது நற்பெயர் கெட்டுவிட்டது.

Practice it
எனவே ஒரு பொருளானது அதனுடைய பொலிவை இழக்கும் பொழுது பொலிவு இழந்த அல்லது பொலிவு மங்கிய என்ற அர்த்தத்தில் tarnished என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க மேலும் ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ அதனுடைய நல்ல பெயரை இழக்கும் பொழுது கெட்டுவிட்டது அல்லது களங்கப்பட்டது என்ற அர்த்தத்தில் இந்த TARNISHED ங்ற வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...