Know the word UPHOLD...
Word of the day is UPHOLD...
The word UPHOLD is a verb.
Meaning
to defend or keep a principle or law, or to say that a decision that has already been made, especially a legal one, is correct அதாவது ஒரு கொள்கை அல்லது சட்டத்தை பாதுகாப்பது அல்லது கடைப்பிடிப்பது அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவு அதாவது சட்டமானது சரியானது என்று கூறுவது என்று அர்த்தம்.
மிகவும் எளிதாக இந்த வார்த்தையை விளக்க வேண்டுமென்றால் இந்த uphold என்ற இந்த வார்த்தையை பெரும்பாலும் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கும் பொழுது ஆதரவு தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் மேலும் காவல் அதிகாரிகள் சட்டத்தை நிலைநாட்டும் பொழுது நிலைநிறுத்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்.
பொதுவாக அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றும் பொழுது அந்த சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் கிளர்ந்தெழும் பொழுது அந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்காக காவல் அதிகாரிகள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் காவல் அதிகாரிகளினுடைய வேலை.
அரசாங்கம் இயற்றிய அந்த சட்டமானது அந்த காவல் அதிகாரிக்கு கூட பிடிக்காமல் இருக்கலாம் இருந்தாலும் அந்த சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அவர் செயல்பட வேண்டும் என்பதுதான் அவரது வேலை. எனவே காவல் துறையானது அதனுடைய வேலையை செய்யும் பொழுது uphold என்ற இந்த வார்த்தையானது நிலைநாட்டுதல் அல்லது நிலைநிறுத்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோன்று நீதிமன்றத்தை நீதிக்காக இருவர் நாடும்போது சட்டத்தின் அடிப்படையில் யார் பக்கம் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலையாகும். இவ்வாறாக நீதிமன்றம் ஒரு நீதியை வழங்கும் பொழுது uphold என்ற இந்த வார்த்தையானது ஆதரவு தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
In a sentence
The court upholds the amendments made by the government.
அரசு செய்த திருத்தங்களை நீதிமன்றம் ஆதரித்தது.
The police arrested the politician and upheld the law.
காவல் அதிகாரி அரசியல்வாதியை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டினர்.
Practice it
ஆதரவு தெரிவித்தல் மேலும் நிலைநாட்டுதல் அல்லது நிலைநிறுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த UPHOLD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக