Know the word VANISH...

Word of the day is VANISH...
Function
The word VANISH is a verb.

Meaning
1) to disappear or stop being present especially in a sudden and surprising way அதாவது திடீரென ஆச்சரியமான முறையில் மறைந்துவிடுவது அல்லது இல்லாமல் போவது என்று அர்த்தம்.

அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு நபரோ கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருக்கின்ற சில நொடிகளில் காணாமல் போகும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கார் விரைவில் கண்ணிலிருந்து மறைந்து விடும். ஃப்ரிட்ஜில் இருக்கும் எல்லோருக்கும் பிடித்த கடைசி துண்டு கேக் ஆச்சரியமான முறையில் காணாமல் போய்விடும். வீட்டுக்கு போக துடித்துக் கொண்டிருக்கும் பள்ளி மாணவி பெல் அடித்ததும் காணாமல் போய் விடுவாள். பூனையை பார்த்த எலி சடாரென்று காணாமல் போய்விடும்.

இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு நபரோ கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருக்கின்ற சில நொடிகளில் காணாமல் போகும் பொழுது VANISHங்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் சடார்னு காணாமல் போகுதல் அல்லது மறைந்துவிடுதல் அப்படிங்கற இடத்தில vanish ங்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The thief ran into the crowd and vanished.
திருடன் கூட்டத்திற்குள் ஓடி மறைந்தான்.

Practice it
சடார்னு காணாமல் போகுதல் அல்லது மறைந்துவிடுதல் அப்படிங்கற தமிழ் அர்த்தங்களில் இந்த VANISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...