Know the word ALLEVIATE...
Word of the day is ALLEVIATE...
The word ALLEVIATE is a verb.
Meaning
to make pain or problems less severe அதாவது வலி அல்லது பிரச்சினையின் தீவிரத்தை குறைதல் என்று அர்த்தம்.
அதாவது ALLEVIATE என்கிற இந்த வார்த்தையானது ஒரு மனிதன் அதிகப்படியான உடல் வலியால் அவதிப்படும் பொழுது அல்லது அதிகப்படியான மனச்சோர்வால் அவதிப்படும் பொழுது அதனுடைய தீவிரத்தை குறைத்து அதிலிருந்து நிவாரணம் அடைதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ALLEVIATE என்ற இந்த வார்த்தையை சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை தணித்தல் அல்லது குறைத்தல் என்கிற அர்தத்திலும் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் மிகவும் அருமையாக ALLEVIATE என்ற இந்த வார்த்தையை விளக்க வேண்டுமென்றால் இதனை தமிழில் அழித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் தீமையான ஒரு விஷயத்தை அழித்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக ALLEVIATE என்ற இந்த வார்த்தையை தணித்தல், குறைத்தல், போக்குதல் போன்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
In a sentence
He takes pills to alleviate the body pain.
அவர் உடல் வலியைக் குறைக்க மாத்திரைகள் சாப்பிடுகிறார்.
You can do exercise to alleviate the stress.
நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி செய்யலாம்.
If you really want to do something big in life, try to alleviate world hunger.
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் பெரியதாக ஏதாவது செய்ய விரும்பினால், உலகப் பசியைப் போக்க முயற்சி செய்யுங்கள்.
Practice it
எனவே நண்பர்களே! தணித்தல், குறைத்தல், போக்குதல் என்ற அர்த்தத்தில் இந்த ALLEVIATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக