Know the word BEWILDER...

Word of the day is BEWILDER...
Function
The word BEWILDER is a verb.

Meaning
to confuse someone emotionally அதாவது யாராவது ஒருவரை உணர்ச்சி ரீதியாக குழப்புதல் என்று அர்த்தம்.

ஒரு கடினமான கணித பகுதி அதிக நேரம் செலவு செய்து புரிய முயற்சி செய்தும் புரியாத பொழுது மாணவன் உணர்ச்சி ரீதியாக குழம்பிவிடுவான்

12ஆம் வகுப்பு முடிந்ததும் தொடர்ந்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் கூட ஒருவரை உணர்ச்சி ரீதியாக குழப்பிவிடும்.

ஒரு மந்திரவாதியின் மந்திரக்கலைகளை புரிய முயற்சி செய்தும் புரியாத பொழுது ஒருவரை உணர்ச்சி ரீதியாக குழப்பிவிடும்.

மிகவும் நெருங்கிய ஒருவரின் திடீர் மரணம் கட்டாயமாக ஒருவரை உணர்ச்சி ரீதியாக குழப்பிவிடும்.

இவ்வாறாக ஒருவர் உணர்ச்சி ரீதியாக ஒரு காரியத்தை குறித்து குழம்பும் பொழுது BEWILDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் குழம்புதல் அல்லது குழப்புதல்  என்ற அர்த்தத்தில் இந்த BEWILDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The instruction given in the map to reach your house bewildered me.
உனது வீட்டை அடைய வரைபடத்தில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் என்னைக் குழப்பியது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் குழம்புதல் அல்லது குழப்புதல் என்ற அர்த்தத்தில் இந்த BEWILDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...