Know the word BLEAK...

Word of the day is BLEAK...
Function
The word BLEAK is an adjective. 

Meaning
something that is unpleasant or unhappy அதாவது ஏதாவதொன்று விரும்பத் தகாததாக அல்லது மகிழ்ச்சியைத் தராததாக இருத்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு சூழ்நிலையோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு தட்ப வெப்ப சூழ்நிலையோ அல்லது ஒருவரின் மனநிலையோ அல்லது ஒருவரின் பொருளாதார நிலையோ சாதகமற்றதாக, நம்பிக்கை தராததாக சந்தோஷத்தைத் தராததாக அல்லது சந்தோசமற்றதாக இருக்கும் பொழுது இந்த BLEAK என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்

இந்த BLEAK என்ற இந்த வார்த்தையை பல நிலைகளில் பல இடங்களில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு இடமானது அழகற்று இருள் சூழ்ந்து வெறிச்சோடி கிடக்கும் பொழுது அந்த இடத்தை The place is bleak என்று சொல்லலாம்.

ஒரு சூழ்நிலை சாதகமற்றதாக, சந்தோஷம் தராததாக, நம்பிக்கை தராததாக இருக்கும்பொழுது அந்த சூழ்நிலையை It is a bleak situation என்று சொல்லலாம்.

ஒருவரின் பொருளாதார சூழ்நிலை பின்தங்கி இருக்கும் பொழுது அல்லது நிதி நெருக்கடியில் இருக்கும் பொழுது அதனை The economic situation is bleak என்று சொல்லலாம்.

ஒருவர் படித்த படிப்பிற்கான சரியான வேலை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுது அல்லது எதிர்காலத்தில் வேலையே கிடைக்காமல் போய்விடுமோ  என்று அவர் எண்ணும் பொழுது அந்த சூழ்நிலையை his future looks bleak என்று சொல்லலாம்.

ஒரு தட்பவெப்ப சூழ்நிலை சாதகமாக அமையாத பொழுது, கடும் குளிராக இருக்கும் பொழுது it is a bleak weather என்று சொல்லலாம்.

மொத்தத்தில் ஏதாவதொன்று விரும்பத் தகாததாக அல்லது மகிழ்ச்சியைத் தராததாக அல்லது நம்பிக்கை தராததாக அல்லது சாதகமற்றதாக இருக்கும் பொழுது BLEAK என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அதனை விவரிக்கலாம். 

In a sentence
The place is so bleak that nobody wants to go there. 
அந்த இடமானது மிகவும் இருண்டு வெறிச்சோடி கிடப்பதால் யாரும் அங்கே போக விரும்புவதில்லை.

Practice it
எனவே நண்பர்களே! ஒரு இடமோ அல்லது ஒரு சூழ்நிலையோ அல்லது ஒரு தட்பவெட்பநிலையோ அல்லது ஒருவரின் மனநிலையோ அல்லது ஒரு பொருளாதார நிலையோ சாதகமற்றதாக, நம்பிக்கை தராததாக, மகிழ்ச்சியை தராததாக இருக்கும் பொழுது இந்த BLEAK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...