Know the preposition THROUGH in detail...

Know the word THROUGH...
நண்பர்களே! இந்த பதிவிலே PREPOSION  "THROUGH"  பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.

 நான்கு முக்கியமான இடங்களில் நாம்  எவ்வாறு "THROUGH" என்ற Preposition -ஐ பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலாவதாக ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
(கடந்த பதிவில் இதைப் பற்றி நாம் பார்த்தோம்)

இரண்டாவதாக பார்க்கும் பொழுது மற்றும் கேட்கும்பொழுது "ஊடாக" என்னும் தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக "முழுவதும்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நான்காவதாக "கடத்தல்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  (கடத்தல் எனும் பொழுது ஒரு சூழ்நிலையை கடந்து செல்லுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)

மேற்கண்ட அனைத்தையும் பற்றி  விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

முதலாவதாக ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.(கடந்த பதிவில் இதைப் பற்றி நாம் பார்த்தோம்)

எடுத்துக்காட்டு : 1

The animals went through the caves என்று சொல்லலாம் அதாவது விலங்குகள் குகைகள் ஊடாக சென்றன என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The boy struggled as he went through the crowd என்று சொல்லலாம் அதாவது கூட்டத்தின் ஊடாக செல்லும் பொழுது சிறுவன் சிரமப்பட்டான் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We went through seven tunnels to reach the valley என்று சொல்லலாம் அதாவது பள்ளத்தாக்கை அடைய ஏழு சுரங்கங்கள் ஊடாக சென்றோம் என்று அர்த்தம்.


இரண்டாவதாக பார்க்கும் பொழுது மற்றும் கேட்கும்பொழுது ஊடாக என்னும் தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

We can hear what you speak through the wall என்று சொல்லலாம் அதாவது நீங்கள் பேசுவதை நாங்கள் சுவர் ஊடாக கேட்க முடிகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

You can see the solar eclipse through x ray sheet என்று சொல்லலாம் அதாவது எக்ஸ்ரே தாளின் ஊடாக சூரிய கிரகணத்தை காணலாம் என்று அர்த்தம்.

மூன்றாவதாக "முழுவதும்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

This year it rained through October and November என்று சொல்லலாம் அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முழுவதுமாக மழை பெய்தது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

We usually work Monday through Saturday என்று சொல்லலாம் அதாவது நாங்கள் வழக்கமாக திங்கள் முதல் சனி வரை வேலை செய்கிறோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

He was awake through the night to be work என்று சொல்லலாம் அதாவது அவர் வேலை செய்ய இரவு முழுவதும் விழித்திருந்தார் என்று அர்த்தம்.

நான்காவதாக "கடத்தல்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  (கடத்தல் எனும் பொழுது ஒரு சூழ்நிலையை கடந்து செல்லுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)

எடுத்துக்காட்டு : 1

You have to get through this exam to get a job என்று சொல்லலாம் அதாவது வேலையை பெற நீங்கள் இந்த தேர்வை கடந்து வர வேண்டும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I find it difficult to get through the loss of my friend என்று சொல்லலாம் அதாவது எனது நண்பரின் இழப்பை கடந்து வருவது எனக்கு கடினமாக உள்ளது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

He would have never got through this situation without you என்று சொல்லலாம் அதாவது நீங்கள் இல்லாமல் அவர் இந்த சூழ்நிலையை ஒருபோதும் கடந்து இருக்க மாட்டார் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் PREPOSION  "THROUGH" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.

தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் பார்ப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...