Know the word CLEAVE...

Word of the day is CLEAVE...
Function
The word CLEAVE is a verb.

இந்த வார்த்தையானது மிகவும் ரசிக்கத்தக்க அருமையான விஷயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சொல்லலாம் for example மூன்று வகையான  past form வார்த்தைகளை கொண்டுள்ளது அதாவது cleaved, clove and cleft. அதனைப் போன்றே மூன்று வகையான past participles ஐ கொண்டுள்ளது அதாவது cleaved, cloven and cleft.

Two Meanings
இந்த வார்த்தையானது ரொம்ப ரொம்ப வித்தியாசமான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. 

முதலாவதாக it means to cut or split into two or more parts என்று சொல்லலாம் அதாவது  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாக வெட்டுதல் அல்லது பிரித்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு பொருளை மற்றொரு கூர்மையான பொருளை கொண்டு வெட்டுதல் எனுமிடத்தில் வெட்டுதல் அல்லது பிளத்தல் என்னும் தமிழ்  அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக வெட்டுதல் என்ற அர்த்தத்திற்கு எதிர்பதமான ஒட்டுதல் என்கிற அர்த்தத்திலும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதாவது to stick closely to something or someone என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஏதாவதொன்றுடன் அல்லது யாராவதொருவருடன் நெருக்கமாக ஒட்டிக் கொள்ளுதல் என்று அர்த்தம். 

அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ மற்றொரு பொருளையோ அல்லது மற்றொரு மனிதனையோ பற்றி கொள்ளுதல் அல்லது பிடித்துக் கொள்ளுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்

மேலும் ஒரு மனிதன் ஏதாவதொரு நம்பிக்கையை அல்லது ஏதாவதொரு விழுமியத்தை பற்றி கொள்ளுதல் அல்லது பிடித்துக் கொள்ளுதல் அல்லது மிகவும் நம்புதல் என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது இந்த CLEAVE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து to  அல்லது unto என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக இந்த வித்தியாசத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

In a sentence
He just used a stone to cleave the coconut into two parts.
ஒரு கல்லை பயன்படுத்தி அவன் தேங்காயை இரண்டாகப் பிளந்தான்.

When you are scared, you will surely want to cleave to someone's hand. 
நீங்கள் பயப்படும்போது, ​​​​நீங்கள் நிச்சயமாக மற்றொருவரின் கையைப் பற்றிக்கொள்ள விரும்புவீர்கள்.

She always cleaves unto some beliefs which are really odd.
அவள் எப்பொழுதும் சில வித்தியாசமான நம்பிக்கைகளை பற்றிக் கொள்கிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! வெட்டுதல் அல்லது பிளத்தல் மேலும் பற்றி கொள்ளுதல் அல்லது பிடித்துக் கொள்ளுதல் போன்ற அர்த்தங்களில் இந்த CLEAVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...