Know the word COMPLACENT...
Word of the day is COMPLACENT...
The word COMPLACENT is an adjective.
Pronunciation
/kəmˈpleɪsənt/
Meaning
feeling so satisfied with one's own abilities or situation அதாவது ஒருவர் அவரது சொந்த திறமைகளை குறித்து அல்லது அவரது சூழ்நிலையை குறித்து மிகவும் திருப்தி அடைதல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் தான் இருக்கிற சூழ்நிலையை குறித்து அல்லது தற்போது தான் அனுபவிக்கிற சூழ்நிலையை குறித்து ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உணரும் பொழுது இந்தக் COMPLACENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
ஆனால் அதே நேரத்தில் மிகவும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் அந்த மனிதனைக் குறித்து அவரை சார்ந்தவர்கள் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லலாம்.
ஏனெனில் ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய வேலையை அல்லது தான் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக செய்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கலாம் ஆனால் அதே நேரத்தில் ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய வேலையை அல்லது தான் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக செய்யாமல் கூட சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கலாம்.
இவ்வாறாக ஒரு மனிதன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உணரும் பொழுது அந்த உணர்வினை தமிழில் மனநிறைவு அடைதல் என்கிறோம்.
எனவே தமிழில் மனநிறைவு அடைதல் என்கிற இடத்தில் இந்த COMPLACENT என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்
In a sentence
If you become complacent with your easy success, you may fail in your next endeavor.
உங்களது எளிதான வெற்றியில் நீங்கள் மனநிறைவு அடைந்தால், உங்களது அடுத்த முயற்சியில் நீங்கள் தோல்வியடையலாம்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மனநிறைவு அடைதல் என்கிற இடத்தில் இந்த COMPLACENT ங்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக