Know the word CONSPICUOUS...

Word of the day is CONSPICUOUS...
Function
The word CONSPICUOUS is an adjective.

Pronunciation
/kənˈspɪk.ju.əs/

Meaning
Very noticeable or attracting attention அதாவது மிகவும் கவனிக்கத்தக்க வகையில் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபரையோ அல்லது ஒரு இடத்தையோ அல்லது ஒரு பொருளையோ பார்த்தவுடனே நமது கண்களை கவரும் விதமாக அல்லது கண்களுக்கு தெளிவாகத் தெரியும் விதமாக இருக்கும் ஒன்றை விவரிப்பதற்காக இந்த conspicuous என்ற இந்த adjective ஐ பயன்படுத்தலாம்.

பிறருடைய கவனத்தை ஈர்க்க விரும்புகிற ஒருவர் எப்பொழுதும் வித்தியாசமான ஆடைகளை அணிவார் அல்லது வித்தியாசமாக முடியை அலங்கரிப்பார் அல்லது வித்தியாசமாகவே செயல்களை செய்வார்.

இவ்வாறாக பிறரின் கவனத்தை கவரும் விதமாக ஒருவரின் செயல் இருக்கும் பொழுது அதனை விவரிப்பதற்கு இந்த CONSPICUOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

தமிழில் கவனத்தைக் கவரும் விதமாக அல்லது எளிதில் பார்க்கக்கூடியதாக  என்னுமிடத்தில் இந்த CONSPICUOUS என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

In a sentence
His bizarre hair style is conspicuous.
அவரது வினோதமான ஹேர் ஸ்டைல் ​​கவனத்தைக் கவரும் விதமாக உள்ளது.

Her way of speaking is conspicuous by others. 
அவள் பேசும் விதம் மற்றவர்களின் கவனத்தைக் கவரும் விதமாக இருக்கிறது.

Practice it
கவனத்தைக் கவரும் விதமாக அல்லது எளிதில் பார்க்கக்கூடியதாக அப்படிங்ற இடத்தில் இந்த CONSPICUOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...