Know the word CRINGE...

Word of the day is CRINGE...
Function
The word CRINGE is a verb.

Meaning
to feel embarrassed and ashamed about something அதாவது எதையாவதொன்றை வெட்கமாகவும் கேவலமாகவும் உணர்தல் என்று அர்த்தம்.
 
அதாவது ஒரு இடத்தில் தவறுதலாக அறியாமையினால் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையோ அல்லது செய்யப்பட்ட ஒரு செயலோ மீண்டும் நமது புத்திக்கு உரைக்கும் பொழுது ஏற்படுகின்ற அந்த உணர்வை இந்த cringe என்ற வார்த்தையை கொண்டு  விவரிக்கலாம்.

சிறிய வயதில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அதனை இப்பொழுது பார்க்கும் பொழுது அது உங்களுக்கு வெட்கத்தையும் கேவலத்தையும் ஏற்படுத்துவதாக உணர்ந்தால் அதனை இந்த cringe என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

ஒரு பொது இடத்தில் நமது அப்பா அம்மா ஒரு பாட்டுக்கு ஆடும்பொழுது அந்த சூழ்நிலை நமக்கு வெட்கத்தையும் கேவலத்தையும் தருவதாக உணரும் பொழுது அந்த உணர்வினை  இந்த cringe என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் முகம் சுளித்தல் என்ற அர்த்தத்தில் CRINGE என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

In a sentence
She cringed at the sight of her parents dancing.
தனது பெற்றோர் நடனமாடுவதைக் கண்டு அவள் முகம் சுளித்தாள்.

Another Meaning
2) to pull back in fear from someone or something that seems powerful and dangerous அதாவது சக்தி வாய்ந்ததாகவும் ஆபத்தானதாகவும் தோன்றும் ஒருவரிடமிருந்தோ அல்லது ஏதாவதொன்றிடமிருந்தோ பயந்து பின்வாங்குதல் என்று அர்த்தம்.

அதாவது சிலபேருக்கு இரத்தத்தை பார்த்தவுடன் பயமாக இருக்கும் மேலும் சில பேருக்கு இறந்த உடலை பார்க்க பயமாக இருக்கும் மேலும் சில பேருக்கு ஒரு போலீஸ் அதிகாரியையோ அல்லது அவர்களைவிட உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபரையோ பார்ப்பதற்கு பயமாக இருக்கும்.

இவ்வாறாக ஒருவர் ஒருவரிடமிருந்தோ அல்லது ஏதாவதொன்றிடமிருந்தோ பயந்து பின்வாங்கும் பொழுது இந்த cringe என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

தமிழில் பயந்து நடுங்குதல் என்ற அர்த்தத்தில் இந்த cringe என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He cringed at the sight of a police vehicle.
அவர் போலீஸ் வாகனத்தை கண்டு பயந்து நடுங்கினார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் முகம் சுளித்தல் மற்றும் பயந்து நடுங்குதல் என்ற இடங்களில் இந்த CRINGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...