Know the word CULL...

Word of the day is CULL...
Function
The word CULL can be used as verb and noun

Two Meanings as a verb
1) to collect parts or pieces of something to use for another purpose அதாவது ஏதாவது ஒன்றின் பாகங்களையோ அல்லது பகுதிகளையோ மற்றொரு நோக்கத்திற்காக சேகரித்தல் என்று அர்த்தம்.

அதாவது ஏதாவது ஒரு தலைப்பை குறித்து ஒரு கட்டுரை எழுதும் பொழுதோ அல்லது பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எழும் பொழுதோ அந்த தலைப்பை சார்ந்த தகவல்களை நாம் வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரிக்க முயற்சி செய்யும் பொழுது அந்த இடத்தில் சேகரித்தல் என்ற அர்த்தத்தில் இந்தக் CULL என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

தமிழில் எடுத்தல் அல்லது சேகரித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
He should have culled this information from the Internet.
அவர் இந்த தகவலை இணையத்திலிருந்து எடுத்திருக்க வேண்டும்.

She culled some good vegetables for cooking.
அவள் சமைப்பதற்காக சில நல்ல காய்கறிகளை சேகரித்தாள்.

Another meaning as verb and noun
2) to kill animals or remove plants அதாவது விலங்குகளை கொல்லுதல் அல்லது தாவரங்களை அகற்றுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட விலங்கினமானது குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கு அதிகமாக பெருகி விடும் பொழுது அதனுடைய எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்த குறிப்பிட்ட  விலங்கினத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அழிப்பது அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று அவ்வாறாக அந்த விலங்குகளை அழிக்கும் இடத்தில் இந்தக் CULL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதேபோன்று தேவையற்ற அல்லது பயனற்ற தாவரங்களை நீக்கும் பொழுதும் இந்த CULL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக தமிழில் அழித்தல், கொல்லுதல் அல்லது நீக்குதல் போன்ற அர்த்தங்களில் இந்த CULL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை VERB ஆகவும் பயன்படுத்தலாம் NOUN ஆகவும் பயன்படுத்தலாம்.

In a sentence
The local president ordered to cull the stray dogs.
தெருநாய்களை கொல்ல உள்ளூர் தலைவர் உத்தரவிட்டார்.

The workers culled the weeds in the field.
தொழிலாளர்கள் வயலிலிருந்த களைகளை நீக்கினர்.

Environmentalists are against the plan for seal cull.
சீல் அழித்தல் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் எடுத்தல் அல்லது சேகரித்தல் அல்லது அழித்தல், கொல்லுதல் அல்லது நீக்குதல் போன்ற அர்த்தங்களில் இந்த CULL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...