Know the word CUSTODIAN...
Word of the day is CUSTODIAN...
The word CUSTODIAN is a noun.
Meaning
a person who has responsibility for or looks after something அதாவது ஏதாவது ஒன்றிற்கு பொறுப்பான நபர் அல்லது எதையாவதொன்றை கவனிக்கும் நபர் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் ஒரு கட்டிடத்திற்கோ அல்லது ஒரு இடத்திற்கோ அல்லது மற்றொரு மனிதனுக்கோ அல்லது ஒரு விலங்கிற்கோ அல்லது ஒரு பறவைக்கோ அல்லது ஏதாவதொரு வேலையை பொறுப்பாக கவனிப்பதற்கோ பணியமர்த்தப்படும் பொழுது அந்த மனிதனை CUSTODIAN என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
மிகவும் எளிதான மற்றும் அருமையான ஒரு கருத்தை கூற வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவருமே நமக்கு நாமே CUSTODIAN என்று சொல்லலாம் ஏனென்றால் நமது உடல் நலனையும் நமது மன நலனையும் பொறுப்பாக பாதுகாக்க வேண்டியது நாம்தான்.
இவ்வாறாக ஒரு மனிதன் ஏதாவதொன்றை பொறுப்பாக கவனிக்கும்படி பணியமர்த்தப்படும் பொழுது அந்த மனிதனை இந்த CUSTODIAN இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
எனவே தமிழில் பாதுகாவலர், காவலன், கவனித்துக்கொள்பவர் என்னுமிடத்தில் இந்த CUSTODIAN என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
In a sentence
He is the custodian of this building.
அவர்தான் இந்தக் கட்டிடத்தின் பாதுகாவலர்.
It has become important to appoint a custodian to take care of the land.
நிலத்தை பராமரிக்க ஒரு பாதுகாவலரை நியமிப்பது முக்கியமானதாகிவிட்டது.
You are the custodian for yourself.
உனக்கு நீதான் பாதுகாவலர்.
Practice it
எனவே நண்பர்களே! ஒரு மனிதன் ஏதாவதொன்றை பொறுப்பாக கவனிக்கும் படி பணியமர்த்தப்படும் பொழுது அந்த மனிதனை இந்த CUSTODIAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தி அழையுங்கள்.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக