Know the word DEARTH...

Word of the day is DEARTH...
Function
The word DEARTH is a noun. 

Meaning
a scarcity or lack of something அதாவது ஏதாவதொன்று போதுமானதாக இல்லாதிருத்தல் அல்லது பற்றாக்குறை என்று அர்த்தம்.

அதாவது ஒரு கேள்விக்கு போதுமான பதில் கிடைக்காத பொழுது அதனை dearth of answers என்று சொல்லலாம்.

ஒரு குற்றவாளியை குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான சாட்சி இல்லாத பொழுது அதனை dearth of evidence என்று சொல்லலாம்.

பேசி சிரிக்க போதுமான நண்பர்கள் இல்லாத பொழுது அதனை dearth of friends என்று சொல்லலாம்.

சாப்பிடுவதற்கு சத்தான உணவு கிடைக்காத பொழுது அதனை dearth of food என்று சொல்லலாம்.

இவ்வாறாக ஏதாவதொன்று போதுமானதாக இல்லாதிருக்கும் பொழுது அந்த இடத்திலே "dearth of" என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு பதிலாக இந்த DEARTH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
People around the world suffer due to dearth of food.
உலகெங்கிலும் உள்ள மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

Practice it
எனவே நண்பர்களே! பற்றாக்குறை என்ற இடத்தில் இந்த DEARTH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...