Know the word ENDEAVOR...
Word of the day is ENDEAVOUR...
The word ENDEAVOUR can be used as verb and noun.
Meaning
to try hard to make something happen அதாவது ஏதாவதொன்றை நடக்க வைக்க கடினமாக முயற்சி செய்தல் என்று அர்த்தம்.
பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் வாழ்கிற இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பணம், பதவி, அதிகாரம் போன்ற தற்காலிக சந்தோஷத்தை தருகிற விஷயங்களை அடைய பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லலாம்.
ஒரு அரசியல்வாதியாக இருந்தால் எவ்வாறாக தொடர்ந்து பதவியில் இருக்கலாம் என்பதற்காக தொடர்ந்து பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்.
அதே நேரத்தில் ஒரு விஞ்ஞானியாக இருந்தால் எவ்வாறு மற்றொரு கிரகத்தை அடையலாம் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்.
மேலும் ஒரு சாதாரண மனிதன் இந்த பூமியில் எப்படியாவது ஒரு குட்டி நிலமாவது வாங்கிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்கிறான்.
இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றை அடைவதற்காக பெரும் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறான் என்று சொல்லலாம்
இவ்வாறாக பெருமுயற்சி செய்தல் அல்லது பெருமுயற்சி அல்லது முயற்சி போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த ENDEAVOUR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
I endeavour everyday to make this channel big.
இந்த சேனலை பெரிதாக்க நான் தினமும் பெருமுயற்சி செய்கிறேன்.
I hope that my endeavour would make it happen one day.
எனது முயற்சி ஒருநாள் அதனை நடைபெறச் செய்யும் என நான் நம்புகிறேன்.
Practice it
எனவே நண்பர்களே! பெரும் முயற்சி செய்தல் அல்லது பெரும் முயற்சி அல்லது முயற்சி என்கிற இடத்தில் இந்த ENDEAVOUR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக