Know the word ENDURE...
Word of the day is ENDURE...
The word ENDURE is an verb.
Meaning
ENDURE என்ற இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது முதலாவதாக it means to suffer something difficult, unpleasant, or painful அதாவது கடினமான, விரும்பத்தகாத அல்லது வேதனையான ஒன்றை அனுபவிப்பது என்று அர்த்தம்.
அதாவது தமிழில் நாம் தாங்கிக் கொள்ளுதல் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவோம் அதாவது ஒரு சூழ்நிலை மிகவும் வேதனை தருவதாக இருக்கும்பொழுது அல்லது கடினமானதாக இருக்கும் பொழுது அல்லது மிகவும் வலி தருவதாக இருக்கும் பொழுது பயன்படுத்துவோம். அந்த இடங்களில் ENDURE என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக வேலை செய்யும் இடத்தில் நமக்கு மேலே பொறுப்பில் உள்ளவர் நம்மை வேதனைப்படுத்தும் பொழுது அதனை வேலையின் நிமித்தமாக தாங்கிக் கொள்ளுதல் அல்லது அண்டைவீட்டார் நமக்கு கொடுக்கும் இன்னல்களை சச்சரவுகளை தாங்கிக் கொள்ளுதல் அதே போன்று அவசரமாக ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்று இருக்கும் பொழுது பேருந்து வராமலிருந்தால் அதனால் ஏற்பட்ட காலதாமதத்தை தாங்கிக் கொள்ளுதல் மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அதனால் வரும் வலியை தாங்கிக் கொள்ளுதல் இவ்வாறாக ஒரு சூழ்நிலை கடினமானதாக, வேதனை தருவதாக, வலி தருவதாக இருக்கும் பொழுது அதனை தாங்கிக் கொள்ளுதல் என்னுமிடத்தில் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக it means to continue to exist for a long time அதாவது நீண்ட காலமாக தொடர்ந்து இருத்தல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதனுடைய குணமோ அல்லது புகழோ அல்லது ஒரு இடத்தினுடைய புகழோ அல்லது ஒரு மொழியினுடைய புகழோ அல்லது ஏதாவதொன்று நீண்டகாலமாக நாம் வாழும் இந்த உலகில் நிலைத்திருக்கும் பொழுது நிலைத்திருத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த ENDURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மிகவும் அருமையான ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழி தோன்றிய காலத்தில் தோன்றிய எந்தமொழிகளுமே இப்பொழுது பயன்பாட்டில் இல்லை என்று சொல்லப்படுகிறது இவ்வாறாக தமிழ்மொழியானது காலத்தால் அழியாமல் இன்றும் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
இவ்வாறாக ஒரு விஷயம் தொடர்ந்து நிலைத்திருக்கும் பொழுது நிலைத்திருத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த ENDURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
I will not endure his abusive words anymore.
இனிமேலும் நான் அவரது அசிங்கமான அல்லது தவறான அல்லது தரமற்ற வார்த்தைகளை தாங்க கொள்ளமாட்டேன்.
God's love alone endures forever and ever.
கடவுளின் அன்பு மட்டுமே என்றென்றும் நிலைத்திருக்கும்.
Practice it
எனவே நண்பர்களே! தாங்கிக் கொள்ளுதல் அல்லது நிலைத்திருத்தல் என்ற அர்த்தங்களில் இந்த ENDURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக