Know the word EXTOL...

Word of the day is EXTOL...
Function
The word EXTOL is a verb.

Meaning
to praise something or someone very much அதாவது எதையாவதொன்றை அல்லது யாராவதொருவரை அதிகமாக புகழ்வது என்று அர்த்தம். 

பொதுவாக ஏதாவதொன்று நம்முடைய மனதுக்கு இனிமையானதாக ஏற்புடையதாக சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும் பொழுது அதனை எண்ணி நாம் மகிழ்ச்சியடைவோம்.

அதனைப் பற்றி யாராவது ஏதாவது கேட்கும் பொழுது அதனை எந்த அளவுக்கு சிறப்பாக உயர்த்தி பாராட்டி பேச முடியுமோ அந்த அளவுக்கு அதனை சிறப்பாக உயர்த்தி பாராட்டி பேசுவோம்.

அந்த இடத்தில்தான் இந்த EXTOL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறாக ஒருவரை ஒருவர் அதிகமாக பாராட்டும் பொழுது அதனை நாம் தமிழில் புகழ்தல் என்று சொல்லுவோம் அந்த இடத்தில்தான் இந்த EXTOL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் புகழ்தல் அல்லது போற்றுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். 

In a sentence
when the manager gave vote of thanks, he extolled suresh, that made others very angry.
மேலாளர் நன்றியுரை ஆற்றியபோது, ​​அவர் சுரேஷைப் புகழ்ந்தார், அது மற்றவர்களை மிகவும் கோபப்படுத்தியது.

She extolled his political adroitness.
அவனுடைய அரசியல் சாமர்த்தியத்தை அவள் புகழ்ந்தாள்.

Practice it
புகழ்தல் அல்லது போற்றுதல் அப்படிங்ற இடத்தில் இந்த EXTOL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...