Know the word FEEBLE...
Word of the day is FEEBLE...
The word FEEBLE is an adjective.
Meaning
weak and without energy, strength, or power அதாவது பலவீனமான மற்றும் ஆற்றல், வலிமை அல்லது சக்தி இல்லாத என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் வயதின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ உடல் வலிமை இழந்து, சக்தியுடன் ஆற்றலுடன் பேச முடியாமலோ அல்லது எழுந்து நடக்க முடியாமலோ அல்லது தனது உடல் சார்ந்த செயல்களை செய்ய முடியாமலோ இருக்கும் பொழுது பலவீனமான என்ற அர்த்தத்தில் இந்த FEEBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மேலும் தமிழில் சப்பையான என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவோம். அந்த இடங்களிலும் இந்த FEEBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு சப்பையான காரணம் சொல்கிறான் என்று சொல்லுவோம் அல்லது ஒரு சப்பையான எடுத்துக்காட்டு சொல்கிறான் என்று சொல்லுவோம் மேலும் சப்பையான ஜோக் சொல்கிறான் என்று சொல்லுவோம் மேலும் சப்பையான ஐடியா சொல்கிறான் என்று சொல்லுவோம் அந்த இடங்களில் இந்த FEEBLE என்ற இந்த வார்த்தையை சப்பையான என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
இவ்வாறாக FEEBLE என்ற இந்த வார்த்தையை பலவீனமான அல்லது சப்பையான என்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
In a sentence
His voice is so feeble that he does not want to speak.
அவரது குரல் மிகவும் பலவீனமாக இருப்பதால் அவர் பேச விரும்பவில்லை.
He always says feeble jokes.
அவன் எப்பொழுதும் சப்பையான நகைச்சுவைகளைச் சொல்வான்.
His ideas are so feeble.
அவனது திட்டங்கள் அல்லது யோசனைகள் மிகவும் பலவீனமானவை.
Practice it
எனவே நண்பர்களே! பலவீனமான அல்லது சப்பையான என்ற அர்த்தங்களில் இந்த FEEBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக