Know the word FLEE...

Word of the day is FLEE...
Function
The word FLEE is a verb.

Meaning
 to run away especially because of danger or fear அதாவது ஆபத்தின் காரணமாகவோ அல்லது பயத்தின் காரணமாகவோ ஓடிவிடுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு சூழ்நிலை ஆபத்தானதாக தெரியும் பொழுது அல்லது ஆபத்து என அறியும் பொழுது அந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக அந்த இடத்திலிருந்து ஒருவர் தப்பிச் செல்லும் பொழுது அந்த இடத்தில் FLEE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் நாம் யாரை குறித்தாவது அல்லது எதை குறித்தாவது பயப்படும் பொழுது அந்த இடத்தையோ அல்லது அந்த நபரையோ தவிர்க்க முயற்சி செய்வோம் அதனால் அந்த இடத்தை விட்டு அல்லது அந்த நபரை விட்டு தப்பிச் சென்று விடுவோம் அந்த இடத்திலும் FLEE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் தப்பிச் செல்லுதல், ஓடிப்  போகுதல் அல்லது ஓடிப் போய்விடுதல் என்று சொல்லும் இடங்களில் FLEE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஓடிப் போகுதல் என்று சொல்லும்பொழுது காலால் ஓடி போகுதல் என்ற அர்த்தம் மட்டுமல்ல வாகனத்தை பயன்படுத்தி ஓடிப் போகுதல் என்ற அர்த்தமும் இதனுள் அடங்கும். 

மேலும் FLEE என்ற இந்த வார்த்தையை "ஒரு இடத்திற்கு ஓடிப் போகுதல்" என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் மேலும் ஒரு இடத்திலிருந்து ஓடிப்போகுதல் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம்.

ஒரு இடத்திற்கு ஓடிப் போகுதல் என்று பயன்படுத்தும் பொழுது FLEE TO என்று பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ஒரு இடத்திலிருந்து ஓடி போகுதல் என்று பயன்படுத்தும் பொழுது FLEE FROM என்று பயன்படுத்தலாம் அல்லது FROM பயன்படுத்தாமல் FLEE என்று மட்டுமே பயன்படுத்தலாம்.

In a sentence
He advised me to flee to any safe place.
பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் செல்லுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார்.

As soon as he saw her, he fled (from) there.
அவளைப் பார்த்ததும் அவன் அங்கிருந்து ஓடிப் போய்விட்டான். 

Practice it
எனவே நண்பர்களே! தப்பிச் செல்லுதல், ஓடிப்  போகுதல் அல்லது ஓடிப் போய்விடுதல் என்ற இடங்களில் இந்த FLEE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...