Know the word IMPOSTOR...

Word of the day is IMPOSTOR...
Function
The word IMPOSTOR is a noun. 

Meaning
a person who pretends to be someone else in order to deceive others அதாவது மற்றவர்களை ஏமாற்றுவதற்காக வேறொருவராக நடிக்கும் நபர் என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் தனது உருவத்தை மாற்றியோ அல்லது தனது பெயரை மாற்றியோ பிறரை ஏமாற்றினாலோ அல்லது ஏமாற்ற முயற்சி செய்தாலோ அந்த நபரை இந்த IMPOSTOR என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் தனது அடையாளத்தை மாற்றி பிறரை ஏமாற்ற முயற்சி செய்யும்பொழுது இந்த IMPOSTOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு மனிதன்தான் மற்றொரு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை நமது எண்ணங்கள் கூட நம்மை ஏமாற்றி விடலாம். தமிழில் கூட சொல்வார்கள் "நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்" என்று.

எனவே நண்பர்களே! ஏமாற்றுவது எதுவாக இருந்தாலும் அதனை IMPOSTOR என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

ஆள்மாறாட்டகாரன், ஏமாற்றுகாரன் அல்லது வஞ்சிப்பவன் போன்ற தமிழ் அர்த்தங்களில் IMPOSTOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Rudyard kipling considers triumph and disaster as impostors.
ரூட்யார்ட் கிப்லிங் மிகப்பெரிய வெற்றியையும் பேரழிவையும் ஏமாற்றுக்காரர்களாகக் கருதுகிறார்.

Practice it
எனவே நண்பர்களே! ஆள்மாறாட்டகாரன், ஏமாற்றுகாரன் அல்லது வஞ்சிப்பவன் என்ற அர்த்தத்தில் இந்த IMPOSTOR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...