Know the word JUBILANT...
Word of the day is JUBILANT...
The word JUBILANT is an adjective.
Meaning
feeling or expressing great happiness, especially because of a success அதாவது ஒரு வெற்றியின் காரணமாக மிகவும் மகிழ்ச்சியாக உணருதல் அல்லது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் என்று அர்த்தம்.
இந்த JUBILANT என்ற இந்த வார்த்தையானது ஒரு மனிதனின் உடல் உள்ளம், நாடி, நரம்பு எல்லாம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் போது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
அதாவது பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வெற்றி அல்லது ஒரு நல்ல செய்தியால் ஏற்படும் மிகப்பெரிய மகிழ்ச்சியை குறிப்பதற்கு இந்த JUBILANT என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.
இப்படிப்பட்ட மகிழ்ச்சியானது வாழ்க்கையில் பல நிலைகளில் வரலாம். அவை படிப்பில் கிடைத்த வெற்றியாக இருக்கலாம். விளையாட்டில் கிடைத்த வெற்றியாக இருக்கலாம். அரசியலில் கிடைத்த வெற்றியாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக பல வருடங்களாக ஒரு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் பெற்றோருக்கு கிடைக்கின்ற ஒரு குழந்தை வரம் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.
மொத்தத்தில் ஒரு மனிதன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கும் பொழுது JUBILANT என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.
தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அக்களித்தல், பேருவகை கொள்தல், குதூகலம் அடைதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் அதனை விட சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் "ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருத்தல் அல்லது மகிழ்ச்சியாக இருத்தல்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
The whole team was jubilant as they won the World Cup for the first time.
முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றதால் ஒட்டுமொத்த அணியும் மிகுந்த மகிழ்ச்சியால் நிறைந்தது.
Practice it
எனவே நண்பர்களே! அக்களித்தல், பேருவகை கொள்தல், குதூகலம் அடைதல் அல்லது "ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருத்தல் அல்லது மகிழ்ச்சியாக இருத்தல்" போன்ற அர்த்தங்களில் இந்த JUBILANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக