Know the word LANGUISH...

Word of the day is LANGUISH...
Function
The word LANGUISH is a verb.

Meaning
இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது முதலாவதாக it means to grow weak or feeble அதாவது தொடர்ந்து பலவீனமாகுதல் அல்லது வலுக்குறைதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு உயிரினம் (மனிதனாக இருக்கலாம் அல்லது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது தாவரமாக இருக்கலாம்) உண்ண உணவின்றியோ அல்லது சத்தான உணவில்லாமையினாலோ வலிமை இழந்து சக்தி இழந்து பலவீனமாக இருக்கும் பொழுது இந்த LANGUISH என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

மேலும் ஒரு தொழில் வளர்ச்சி குன்றி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் பொழுதும் இந்த LANGUISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக it means to exist in an unpleasant or unwanted situation, often for a long time அதாவது விருப்பமில்லாத அல்லது சந்தோஷம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நீண்டகாலமாக வாழ்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் தான் விருப்பமில்லாத அல்லது சந்தோசமில்லாத ஒரு இடத்தில் வாழ தள்ளப்படும் போதும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேற்கூறிய இரண்டு அர்த்தங்களும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு மனிதன் சந்தோஷம் இல்லாத விருப்பம் இல்லாத ஒரு இடத்தில் வாழ தள்ளப்படும் பொழுது அவன் பலவீனமாகி வலுக்குறைந்து விடுவான் அதைப்போல ஒரு தாவரம் அதற்குத் தேவையான ஒளி கிடைக்காத பொழுது அதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காத பொழுது வலுகுறைந்து கருகிவிடும் எனவே இந்த இரண்டு அர்த்தங்களும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

எனவே இந்த அர்த்தங்களில் LANGUISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் நலிவடைதல், கருகுதல், வாடுதல், பலவீனப்படுதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்.

In a sentence
Many people in the world languish due to dearth of food.
உலகில் பலர் உணவுப் பற்றாக்குறையால் வாடுகின்றனர்.

Trees and plants languish due to dearth of water.
தண்ணீர் பற்றாக்குறையால் மரங்கள், செடிகள் கருகி வருகின்றன.

He languished in the jail for years. 
அவர் பல ஆண்டுகளாக சிறையில் வாடினார்.

Many small industries continue to languish after COVID-19.
கோவிட்-19க்குப் பிறகு பல சிறு தொழில்கள் தொடர்ந்து நலிவடைந்து வருகின்றன.

Practice it
எனவே நண்பர்களே! நலிவடைதல், கருகுதல், வாடுதல், பலவீனப்படுதல் போன்ற இடங்களில் இந்த LANGUISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...