Know the word RESPITE...

Word of the day is RESPITE...
Function
The word RESPITE can be used as verb and noun

Meaning as a verb
a useful delay before something unpleasant happens அதாவது விரும்பத்தகாத ஒன்று நடக்கும் முன் கிடைக்கும் பயனுள்ள தாமதம் என்று அர்த்தம்.

அதாவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கடினமான சூழ்நிலை ஏற்படும்போது அந்த கடினமான சூழ்நிலையை சிறிது காலம் தள்ளிப் போடுவது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு விரும்பத்தகாத பணி அமர்வு ஏற்படும் பொழுது பயன்படுத்தலாம் அதாவது ஒரு நல்ல பொறுப்பில் இருப்பவரை அந்த பொறுப்பிலிருந்து இறக்கி பணி இறக்கம் செய்தல் என்ற இடத்தில் பயன்படுத்தலாம் அல்லது பணியின் நிமித்தமாக ஒரு விரும்பத்தகாத இடமாற்றம் நடக்கும் போது பயன்படுத்தலாம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியினுடைய மரண தண்டனையை சிறிது காலம் ஒத்தி வைப்பது என்ற இடத்தில் பயன்படுத்தலாம்.

தமிழில் ஒத்தி வைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த respite என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The court respited the execution of the criminal.
குற்றவாளியின் மரணதண்டனையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Meaning as a noun
a pause or rest from something difficult or unpleasant அதாவது ஒரு கடினமான அல்லது விரும்பத்தகாத ஒன்றிலிருந்து கிடைக்கும் இடைநிறுத்தம் அல்லது ஓய்வு என்று அர்த்தம்.

அதாவது சாப்பிட கூட நேரம் இல்லாமல் கடினமாக உழைத்து கொண்டிருக்கும் ஒரு வேலையிலிருந்து எடுக்கும் ஒரு இடைநிறுத்தம் அல்லது ஓய்வு என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு கடினமான தேர்வுக்கு இடைவிடாமல் தயார் செய்து கொண்டிருக்கும் ஒருவர் எடுக்கும் இடைநிறுத்தம் அல்லது ஓய்வு என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் இடைநிறுத்தம் அல்லது ஓய்வு என்ற அர்த்தத்தில் இந்த respite என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He prepared for hours for the exam without respite.
அவர் ஓய்வின்றி தேர்வுக்கு மணிக்கணக்கில் தயார் செய்தார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஒத்தி வைத்தல் மற்றும் இடைநிறுத்தம் அல்லது ஓய்வு என்ற இடங்களில் இந்த RESPITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...