Know the word REVERE...

Word of the day is REVERE...
Function
The word REVERE is a verb.

Meaning
to greatly respect and admire someone or something அதாவது யாரையாவது அல்லது எதையாவது பெரிதும் மதிக்கவும் பாராட்டவும் செய்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதனோ அல்லது அவரது செயலோ மிகவும் மதிக்கத் தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் போற்றத்தக்கதாகவும் இருக்கும் பொழுது இந்த REVERE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

REVERE என்ற இந்த வார்த்தையினுடைய அர்த்தமானது ஒருவரை அல்லது அவரது செயலை மதித்தல் என்ற நிலையை கடந்து ஒருவரை வணங்குதல் என்ற நிலைக்கு உயர்த்தப்படும் பொழுது பயன்படுத்தபட வேண்டும் என்று சொல்லலாம்.

ஆனால் அதே நேரத்தில் வணக்கம் செலுத்துதல் என்பது ஒருவரை கடவுள் நிலைக்கு உயர்த்துவது என்று ஆகிவிடும் எனவே ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்துவது என்பது சரியான நிலைப்பாடு கிடையாது.

எனவே REVERE என்ற இந்த வார்த்தையின் அர்த்தமானது RESPECT என்ற வார்த்தைக்கு மேலாகவும் WORSHIP என்ற வார்த்தைக்கு கீழாகவும் வைத்து பார்க்கவேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

இவ்வாறாக REVERE என்ற இந்த வார்த்தையை பெரிதும் மதிக்கபடுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
Whoever works for justice must be revered.
நீதிக்காக பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பெரிதும் மதிக்கப்பட வேண்டும்.

Whoever abolishes casteism must be revered.
சாதிவெறியை ஒழிப்பவர் யாராக இருந்தாலும் பெரிதும் மதிக்கப்பட வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! பெரிதும் மதிக்கபடுதல் என்ற அர்த்தத்தில் இந்த REVERE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...