Know the word SHODDY...

Word of the day is SHODDY...
Function
The word SHODDY is an adjective and noun.

Meaning
badly and carelessly made, using low quality materials அதாவது தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மோசமாக செய்யப்பட்ட என்று அர்த்தம். 

அதாவது புதிதாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்த வெகு சில நாட்களிலேயே பழுதடைந்தது என்றால் அந்த கட்டிடமானது shoddy materials கொண்டு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம் அதாவது தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் மேலும் shoddy workmanship பையும் காரணமாக சொல்லலாம் அதாவது தரமற்ற வேலைப்பாடு என்று அர்த்தம். 

இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ தரமற்றதாக கடமைக்கு செய்வது போல இருக்கும்பொழுது இந்த SHODDY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

தமிழில் தரமற்ற அல்லது தரம் குன்றிய அல்லது கடமைக்கென்று என்னுமிடத்தில் இந்த SHODDY என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

In a sentence
Nobody will be happy to buy shoddy goods. 
தரமற்ற பொருட்களை வாங்குவதில் யாரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

Shoddy investigation will not give justice. 
தரம் குன்றிய விசாரணை நீதியை வழங்காது.
அல்லது
கடமைக்கென்று நடத்தப்பட்ட விசாரணை நீதியை வழங்காது.

Practice it
தரமற்ற அல்லது தரம் குன்றிய அல்லது கடமைக்கென்று அப்படிங்ற இடத்தில் இந்த SHODDY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...