Know the word SMITE...

Word of the day is SMITE...
Function
The word SMITE can be used as verb and noun.

Two Meanings
இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது முதலாவதாக it means to strike with a firm blow அதாவது மிகவும் பலமான அடியால் தாக்குதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனை தனது கையாலோ அல்லது ஏதேனும் ஒரு ஆயுதம் கொண்டோ மிகவும் பலமாக தாக்கும் பொழுது இந்த SMITE என்ற இந்த வார்த்தையை verb ஆக அல்லது noun ஆக பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு மனிதன் மிகப்பெரிய பண இழப்பை சந்திக்கும் பொழுதோ அல்லது மிகப்பெரிய கொடிய நோயால் பாதிக்கப்படும் பொழுதும் கூட இந்த SMITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

நாம் தமிழில் சில இடங்களில்  "சரியான அடி" என்று பயன்படுத்துவோம் அந்த இடங்களில் இந்த SMITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே பலமான அடி அல்லது பலமாக அடித்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் SMITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக it means be strongly attracted to someone or something அதாவது யாராவதொருவர் மீதோ அல்லது ஏதாவதொன்றின் மீதோ வலுவாக ஈர்க்கப்படுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் ஒரு பொருளின் அழகாலோ அல்லது மற்றொரு மனிதனின் அழகாலோ அல்லது மற்றொரு மனிதனின் அறிவுத் திறமையாலோ அல்லது மற்றொரு மனிதனின் ஏதாவதொரு திறமையாலோ மிகவும் அதிகமாக ஈர்க்கப்படும் பொழுது இந்த SMITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது அதிகமாக ஈர்க்கப்படுதல் அல்லது மயங்குதல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த SMITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He smote him with a rod.
அவன் ஒரு தடியால் அவனை பலமாக அடித்தான்.

She fell unconscious by his smite.
அவனது பலமான அடியால் அவள் மயங்கி விழுந்தாள்.

He was smitten by her beauty.
அவளது அழகில் அவன் மயங்கினான்.

Practice it
எனவே நண்பர்களே! பலமான அடி அல்லது பலமாக அடித்தல் மேலும் அதிகமாக ஈர்க்கப்படுதல் அல்லது மயங்குதல் என்ற அர்த்தங்களில் இந்த SMITE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...