Know the word ABOVEBOARD...
Word of the day is ABOVEBOARD...
/əˌbʌvˈbɔːd/
Function
The word ABOVEBOARD can be used as adjective and adverb.
Meaning
honest and not trying to deceive அதாவது நேர்மையான மற்றும் ஏமாற்ற முயற்சிக்காத என்று அர்த்தம்.
அதாவது ABOVEBOARD என்ற இந்த வார்த்தையானது சீட்டு விளையாட்டிலிருந்து தோன்றிய ஒரு வார்த்தையாகும்.
சீட்டு விளையாட்டில் நேர்மையாக விளையாடுவது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். எல்லா விளையாட்டிலும் நேர்மையாக விளையாடுவது என்பது மிக முக்கியமான ஒன்று தான் ஆனால் இந்த சீட்டு விளையாட்டில் சிறியதாக ஏமாற்றினாலே அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அதாவது சீட்டு விளையாடும் பொழுது சீட்டு விளையாடும் ஒரு நபரின் கையும் சீட்டும் மேஜைக்கு மேலே இருக்கும் வரை அவர் நேர்மையாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தை தரும்.
அதே நேரத்தில் சீட்டு விளையாடும் ஒரு நபர் அவரது கையையோ அல்லது சீட்டையோ மேஜைக்கு அடியில் கொண்டு போக முயற்சி செய்தாலே அவர் ஏதோ ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்ற அர்த்தத்தை தந்துவிடும்.
எனவே நண்பர்களே! இந்த ABOVEBOARD என்ற இந்த வார்த்தையை ஒருவர் அவரது சொல்லிலும் செயலிலும் 100% நேர்மையை வெளிப்படுத்தும் பொழுது பயன்படுத்த வேண்டும்.
எனவே தமிழில் ரொம்ப ரொம்ப நேர்மையான என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
His business dealings are always aboveboard.
அவரது வணிக செயல்பாடுகள் எப்பொழுதும் ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்கிறது.
The company wants to work with all aboveboard.
நிறுவனம் எல்லோருடனும் ரொம்ப ரொம்ப நேர்மையாக நடந்து கொள்ள விரும்புகிறது.
Practice it
எனவே நண்பர்களே! ரொம்ப ரொம்ப நேர்மையான என்ற அர்த்தத்தில் இந்த ABOVEBOARD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக