Know the word ADEQUATE...

Word of the day is ADEQUATE...
Function
The word ADEQUATE is an adjective. 

Pronunciation
 /ˈæd.ə.kwət/

Meaning
satisfactory or acceptable in quality or quantity அதாவது தரம் அல்லது அளவில் திருப்திகரமான அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க என்று அர்த்தம்.

அதாவது நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படையான தேவைகள் என்று ஒன்று இருக்கிறது அவை உணவு, உடை, உறைவிடம். 

இதையும் தாண்டி இந்த உலகத்தில் இன்னும் சிறப்பாக வாழ்வதற்கு அறிவு தேவைப்படுகிறது, பணம் தேவைப்படுகிறது, உறவுகள் தேவைப்படுகிறது. இதையும் தாண்டி இன்னும் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

இவ்வாறாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான தேவைகள் சிலரிடத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்கும் ஆனால் திருப்தி என்ற ஒன்று இருக்காது. பலரிடத்தில் சுத்தமாகவே ஒன்றும் இருக்காது திருப்பியும் இருக்காது, இன்னும் சிலரிடத்தில் போதுமானதாக இருக்கும் திருப்தியும் இருக்கும் என்று சொல்லலாம்.

இவ்வாறாக ஒருவரிடத்தில் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான ஒரு விஷயம் போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருக்கும் பொழுது அந்த இடத்தில் இந்த ADEQUATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறாக தமிழில் போதுமான எனுமிடத்தில் இந்த ADEQUATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She has adequate knowledge to do this job.
இந்த வேலையைச் செய்வதற்கு அவளுக்கு போதுமான அறிவு இருக்கிறது.

I have an adequate space to live here.
எனக்கு இங்கு வசிக்க போதுமான இடம் உள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! ஒரு விஷயம் போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருக்கும் பொழுது இந்த ADEQUATE என்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...