Know the word AMELIORATE...
Word of the day is AMELIORATE...
/əˈmiːl.jə.reɪt/
Function
The word AMELIORATE is a verb.
Meaning
to make a bad or unsatisfactory situation better அதாவது மோசமான அல்லது திருப்தியற்ற ஒரு சூழ்நிலையை சிறப்பானதாக்குதல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு இடத்தில் வாழும் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யாமல் விடப்படும் போது அங்கே ஏற்படும் பிரச்சனைகள் அல்லது குளறுபடிகளை சிறிது நிவர்த்தி செய்வதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பசியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் சாப்பாடு கொடுப்பதன் மூலமாக அல்லது சாப்பாடு வாங்குவதற்கு பணம் கொடுப்பதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு செல்போன் மட்டும் இருக்கும் பொழுது அந்த ஒரு செல்போனுக்காக இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் பொழுது அந்த பிரச்சனையை தீர்க்க இன்னொரு செல்போன் வாங்கி கொடுப்பதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
தமிழில் மேம்படுத்துதல், போக்குதல் அல்லது செம்மைப்படுத்துதல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The government has to provide some aid to ameliorate the hunger of the people here.
இங்குள்ள மக்களின் பசியைப் போக்க அரசு சில உதவிகளைச் செய்ய வேண்டும்.
We are badly in need of rain to ameliorate the drought.
வறட்சியை போக்க நமக்கு மழையின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
Practice it
எனவே நண்பர்களே! மேம்படுத்துதல், போக்குதல் அல்லது செம்மைப்படுத்துதல் என்ற இடத்தில் இந்த AMELIORATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக