Know the word BACKBITE...

Word of the day is BACKBITE...
Pronunciation
/ˈbæk.baɪt/

Function
The word BACKBITE is a verb.

Meaning
to say unpleasant and unkind things about someone who is not there அதாவது இல்லாத ஒருவரைப் பற்றி விரும்பத்தகாத மற்றும் இரக்கமற்ற விஷயங்களைச் சொல்வது என்று அர்த்தம்.

BACKBITE என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தை என்று சொல்லலாம் ஆனால் அதே நேரத்தில் மிகவும் கேவலமான அல்லது ஒரு இழிவான செயல் என்று சொல்லலாம்.

மனிதன் தவறு செய்வது என்பது ஒரு இயற்கையான விஷயமாகும். 100% தவறு செய்யாத ஒரு நபர் இந்த உலகில் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

ஒருவர் தவறு செய்யும் பொழுது அவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டி, அந்த தவறான செயலை திருத்துவது என்பது ஒரு அருமையான செயல் என்றே சொல்லலாம்.

ஒருவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முதலில் நாம் ஒழுங்காக இருக்க வேண்டும் பின்பு அதனை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு நமக்கு துணிச்சல் இருக்க வேண்டும் இல்லை என்றாலும் அதனை செய்ய முடியாது.

ஆங்கிலத்தைப் போலவே இந்த BACKBITE என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் புறங்கூறிதிரிதல் அல்லது புறங்கூறுதல் அல்லது முதுகுக்கு பின்னாடி பேசுதல் போன்ற அருமையான வார்த்தைகள் உள்ளது.

In a sentence
He likes to backbite others.
அவருக்கு பிறரை புறங்கூறுதல் பிடிக்கும்.

They backbite their colleagues.
அவர்கள் அவர்களது சக ஊழியர்களை பற்றி புறங்கூறித்திரிகிறார்கள்.

He is good at backbiting.
அவர் புறங்கூறுவதில் வல்லவர்.

Practice it
எனவே நண்பர்களே! புறங்கூறி திரிதல் அல்லது புறங்கூறுதல் அல்லது முதுகுக்கு பின்னாடி பேசுதல் என்ற அர்த்தத்தில் இந்த BACKBITE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...