Know the word CONDUCIVE...

Word of the day is CONDUCIVE...
Pronunciation
/kənˈduː.sɪv/

Function
The word CONDUCIVE is an adjective.

Meaning
providing the right conditions for something good to happen or exist அதாவது ஏதாவது நல்லது நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருத்தல் அல்லது சூழ்நிலையை ஏற்படுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது CONDUCIVE என்ற இந்த வார்த்தையானது ஒரு காலநிலையை அடிப்படையாகக் கொண்டு அல்லது ஒரு சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுகின்ற ஒரு வார்த்தையாகும்.

அதாவது ஒரு சூழ்நிலை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது அல்லது ஏற்றதாக இல்லாமல் இருக்கிறது என்ற அர்த்தங்களில் பயன்படுத்தபட வேண்டும்.

மேலும் அந்த சூழ்நிலை எதற்கு ஏற்றதாக இருக்கிறது என்பதையும் CONDUCIVE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து to அல்லது for போன்ற prepositions ஐ பயன்படுத்தி விளக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வாக்கியமானது முழுமையடையும்.

CONDUCIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும்பொழுது தமிழில் ஏற்றதாக அல்லது உகந்ததாக  என்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

In a sentence
Dhoni's century made the situation conducive to win the match.
தோனியின் சதம் ஆட்டத்தை வெல்லும் சூழ்நிலையை ஏற்படுத்தியது.

This noisy situation is not conducive for doing meditation.
இந்த சத்தமான சூழ்நிலை தியானம் செய்வதற்கு உகந்ததாக இல்லை.

The hot climate is not conducive for playing cricket.
இந்த வெப்பமான காலநிலை கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்றது கிடையாது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த CONDUCIVE என்ற இந்த வார்த்தையை உகந்ததாக அல்லது ஏற்றதாக என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...