Know the word CONVICTION...

Word of the day is CONVICTION...
Pronunciation
/kənˈvɪk.ʃən/

Function
The word CONVICTION is a noun.

Meaning
CONVICTION என்ற இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக it means the fact of officially finding someone guilty என்று சொல்லலாம் அதாவது அதிகாரப்பூர்வமாக ஒருவரை குற்றவாளியென கண்டறிதல் என்று அர்த்தம்.

அதாவது ஒருவரை தகுந்த ஆதாரத்துடன் ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காக குற்றவாளியென அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பொழுது CONVICTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் CONVICTION என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படும்போது தமிழில் குற்றவாளியென தீர்ப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக it means an unshakable belief in something without need for proof or evidence என்று சொல்லலாம் அதாவது எந்தவித ஆதாரமும் இல்லாமல், சாட்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தின் மீது ஒருவர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை என்று அர்த்தம்.

அதாவது நமது அனுபவத்தின் மூலமாகவோ அல்லது நமது எண்ணத்தின் மூலமாகவோ நமக்கு சில நபர்கள் மீதோ அல்லது நம்மீது நமக்கோ அல்லது சில விஷயங்கள் மீதோ நமக்கு அசைக்க முடியாத ஒரு வகையான உறுதியான நம்பிக்கை ஏற்படும். அந்த இடத்திலும் CONVICTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் CONVICTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் உறுதியான நம்பிக்கை என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Though he has a conviction for receiving bribe, he still receives bribe.
அவர் லஞ்சம் வாங்கியதில் குற்றவாளியென தீர்ப்பு பெற்றிருக்கிற போதிலும், அவர் இன்னும் லஞ்சம் வாங்குகிறார்.

Since it was his first conviction for receiving bribe, he was not punished.
அவர் லஞ்சம் வாங்கியதற்காக முதல்முறையாக குற்றவாளியென தீர்ப்பு பெற்றிருப்பதால் அவர் தண்டிக்கப்படவில்லை.

He has a strong conviction that his son will remain as an honest police officer.
அவரது மகன் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகவே இருப்பார் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த CONVICTION என்ற இந்த வார்த்தையை குற்றவாளியென தீர்ப்பு அல்லது உறுதியான நம்பிக்கை என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...