Know the word CORDIAL...
Word of the day is CORDIAL...
/ˈkɔː.di.əl/
Function
The word CORDIAL can be used as adjective and noun.
CORDIAL என்ற இந்த வார்த்தையானது அருமையான மூன்று அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
Meaning
முதலாவதாக it means warm and friendly என்று சொல்லலாம் அதாவது இனிமையான மற்றும் நட்புடனான என்று அர்த்தம்.
தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உள்ளன்புள்ள அல்லது அன்பான அல்லது சுமுகமான போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
அதாவது இரண்டு நபர்களுக்கிடையேயான உறவை CORDIAL என்ற இந்த வார்த்தையை வைத்து விளக்கும் பொழுது அதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த இரு நபர்களுக்கிடையேயான உறவில்
அன்பு இருக்கிறது மற்றும் உண்மையும் இருக்கிறது அதே நேரத்தில் எந்த விதமான எதிர்பார்ப்போ அல்லது நம்பிக்கையோ இல்லை என்று அர்த்தம்.
இவ்வாறாக ஒரு உறவு தொடரப்படும் பொழுது அந்த உறவினை இந்த CORDIAL என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். இந்த வகையான உறவானது நட்பு வட்டாரத்திற்குள்ளும் வராது குடும்ப உறவுகளுக்குள்ளும் வராது.
In a sentence
I just want to maintain a cordial relationship with him.
அவருடன் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகிறேன்.
இரண்டாவதாக it refers to a strong feeling especially dislike அதாவது ஒரு வலுவான வெறுப்புணர்வை கொண்டிருத்தல் என்று அர்த்தம்.
அதாவது இரண்டு நபர்களுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெறுக்கும் பொழுது இந்த வார்த்தையை வலுவான வெறுப்புணர்வு என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
The two leaders EPS and OPS seem to have a cordial dislike for each other.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தலைவர்களும் ஒருவரையொருவர் வலுவாக வெறுப்பது போல் தெரிகிறது.
மூன்றாவதாக it refers to a sweet drink or a sweet medicine அதாவது ஒரு இனிப்பு பானம் அல்லது ஒரு இனிப்பு மருந்து என்று அர்த்தம்.
அதாவது சாப்பிட்டதற்குப் பின்பு செமிப்பதற்காகவும் வாய் இனிப்பதற்காகவும் ஆல்கஹால் கலக்காமல் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டு தண்ணீர் சேர்த்து பருகப்படும் ஒரு இனிப்பு பானத்தை குறிப்பதற்கும் இந்த CORDIAL என்ற இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த அர்த்தத்தில் இதனை பயன்படுத்தும் பொழுது NOUN ஆக பயன்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் சாப்பிட்டதற்குப் பின்பு செமிப்பதற்காகவும் வாய் இனிப்பதற்காகவும் ஆல்கஹாலுடன் கலந்து பருகப்படும் இனிப்பு பானத்திற்கு LIQUEUR என்று பெயர்.
மேலும் ஒரு நோயை தடுப்பதற்காக எடுக்கப்படும் ஒரு மருந்து (syrup) இனிப்பாக இருக்கும் பொழுது அதனையும் இந்த CORDIAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அழைக்கலாம்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் இனிப்பு பானம் அல்லது இனிப்பு மருந்து என்ற அர்த்தத்தில் CORDIAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
Lemon cordial is good for digestion.
எலுமிச்சையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பானம் செரிமானத்திற்கு நல்லது.
Practice it
எனவே நண்பர்களே! ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது உள்ளன்புள்ள அல்லது அன்பான அல்லது சுமுகமான மேலும் வலுவான வெறுப்புணர்வு என்ற அர்த்தத்திலும் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது இனிப்பு பானம் அல்லது இனிப்பு மருந்து என்ற அர்த்தத்திலும் இந்த CORDIAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக