Know the word DESPAIR...

Word of the day is DESPAIR...
Function
The word DESPAIR can be used as verb and noun.

Pronunciation
/dɪˈspɛəɹ/

Meaning
to be hopeless or utter hopelessness அதாவது நம்பிக்கையற்று இருத்தல் அல்லது முற்றிலும் நம்பிக்கையற்ற என்று அர்த்தம்.

அதாவது இந்த DESPAIR என்ற இந்த வார்த்தையை நம்பிக்கை என்பது ஒரு துளிகூட இல்லாத இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துகாட்டாக

தேர்வுக்கு கொஞ்ச நேரம் கூட கொடுத்து தயார் செய்யாத ஒரு மாணவனுக்கு அந்த தேர்வில் வெற்றி அடைவான் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது.

பலமுறை கேட்டும் கொடுத்த பணத்தை வாங்க முடியாத இடத்தில் அந்த பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது.

நம்மை சுற்றி 40-பேர் துப்பாக்கியோடு நம்மை சுடுவதற்காக நிற்கும் பொழுது நாம் மீண்டும் வாழ்வோம் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது.

இவ்வாறாக நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத இடத்தில் இந்த DESPAIR என்ற இந்த வார்த்தையை  பயன்படுத்த வேண்டும். 

ஒரு மனிதன் நம்பிக்கை இழந்து இருக்கும் அந்த நிலையை தமிழில் விரக்தி என்ற வார்த்தையால் விவரிக்கிறோம் எனவே தமிழில் விரக்தியடைதல் அல்லது விரக்தி என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
As India lost the match, the fans fought with each other in despair.
போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், ரசிகர்கள் விரக்தியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர்.

Do not despair. There is solution for all the problems.
விரக்தியடையாதே. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.

Practice it
எனவே நண்பர்களே! நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத இடத்தில் விரக்தியடைதல் அல்லது விரக்தி என்ற அர்த்தத்தில் இந்த DESPAIR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...