know the word DISCLOSE...

Word of the day is DISCLOSE...
Pronunciation
/dɪˈskloʊz/

Function
The word DISCLOSE is a verb. 

Meaning
to give information to the public that was not previously known அதாவது கடந்த காலத்தில் பொதுமக்களுக்கு தெரியாத ஒரு தகவலை தெரியப்படுத்துதல் என்று அர்த்தம்.

பொதுவாக ஒரு படத்தினுடைய கதையானது அந்த படம் வெளிவரும் வரை யாருக்கும் தெரியாமல் கவனமாக இரகசியமாக வைத்திருக்கப்படும்.

தமிழ்நாட்டில் கருக்கலைப்பு அதிகமாக இருப்பதால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்ற தகவலானது இரகசியமாக பாதுகாக்கப்படும். 

அதேபோன்றே ஒரு நிர்வாகமானது வரி கட்டுவதற்கு பயந்து அதனுடைய லாபத்தை ரகசியமாகவே வைத்திருக்கும்.

இவ்வாறாக ரகசியமாக வைத்திருக்கப்பட்ட ஒரு தகவலானது எல்லோருக்கும் தெரியும்படி வெட்ட வெளிச்சமாக சொல்லப்படும் பொழுது இந்த DISCLOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் வெளிப்படுத்துதல் அல்லது வெளியிடுதல் என்ற அர்த்தத்தில் இந்த DISCLOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
When WhatsApp disclosed its terms and conditions, many people uninstalled the app.
வாட்ஸ்அப்பானது அதனுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வெளியிட்டதும், பலர் அந்த செயலியை நீக்கினர்.

He was so frightened that she might disclose his secrets. 
அவள் தனது ரகசியங்களை வெளிப்படுத்திவிடுவாளோ என்று அவன் மிகவும் பயந்தான்.

Practice it
எனவே நண்பர்களே! வெளிப்படுத்துதல் அல்லது வெளியிடுதல் என்ற அர்த்தங்களில் இந்த DISCLOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...