Know the word DOMICILE...
Word of the day is DOMICILE...
/ˈdɑː.mə.saɪl/
Function
The word DOMICILE can be used as verb and noun.
Meaning
the place where a person lives அதாவது ஒரு நபர் வசிக்கும் இடம் என்று அர்த்தம்.
அதாவது நீங்க பலமாடி அடுக்கு கட்டடத்தில் வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு பங்களாவில் வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு அப்பார்ட்மெண்ட்ல வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு சின்ன கூரை வீட்டில் வாழ்ந்தாலும் சரி அல்லது தெருவோரத்தில் மக்கள் நடைபாதையில் ஒரு இடத்தில் வாழ்ந்தாலும் சரி அதுதான் நீங்க வசிக்கும் இடம் அதுதான் உங்களுடைய வாழ்விடம் அதுதான் ஆங்கிலத்தில் DOMICILE என்ற இந்த வார்த்தை பயன்படுத்தி அழைக்கப்படுகிறது.
மேலும் DOMICILE என்ற இந்த வார்த்தையானது சட்டப்படி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரது வாழ்விடத்தை குறிக்கிறது என்றும் சொல்லலாம்.
தமிழில் வாழ்விடம் அல்லது உறைவிடம் அல்லது இருப்பிடம் என்ற அர்த்தத்தில் DOMICILE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
At present he is domiciled in Japan.
தற்போது அவர் ஜப்பானை வாழ்விடமாக கொண்டுள்ளார்.
Though he does not have a proper domicile to live, he leads a happy life.
அவனுக்கு வாழ்வதற்கென்று சரியான ஒரு உறைவிடம் இல்லாத போதும் அவன் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்கிறான்.
Practice it
எனவே நண்பர்களே! வாழ்விடம் அல்லது உறைவிடம் அல்லது இருப்பிடம் என்ற அர்த்தங்களில் இந்த DOMICILE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக