Know the word IMPLORE...

Word of the day is IMPLORE...
Pronunciation
/ɪmˈplɔːr/

Function
The word IMPLORE is a verb.

Meaning
to call upon in supplication அதாவது வேண்டிக் கேட்டுக் கொள்ளுதல் என்று அர்த்தம்.

அதாவது கடவுளிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நேர்மையாகவும் உண்மையாகவும் எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வேண்டுதல் செய்யும் பொழுது IMPLORE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போன்றே ஒரு மனிதனிடம்
ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நேர்மையாகவும் உண்மையாகவும் எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் எதையாவது ஒன்றை கேட்கும் பொழுதும் IMPLORE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக பள்ளிக்கு போக விருப்பம் இல்லாமல் இருக்கும் சின்ன குழந்தையை பள்ளிக்குப் போக கட்டாயப்படுத்தும் போது அந்த சின்ன குழந்தை தயவுசெய்து அனுப்பாதீங்க என்று அழுது கெஞ்சி நிற்கும் அந்த குழந்தையின் அந்த செயலுக்கு இந்த IMPLORE என்ற இந்த வார்த்தையை ஒப்பிடலாம்.

அதே போன்று வாங்கின கடனானது இன்று செலுத்தப்படவில்லை என்றால் வீடானது ஜப்தி செய்யப்படும் என்று வரும்பொழுது பணத்திற்காக உங்களது நண்பனிடம் அழுது கெஞ்சி நிற்கும் அந்த செயலுக்கு இந்த IMPLORE என்ற இந்த வார்த்தையை ஒப்பிடலாம்.

தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மன்றாடி கேட்டல் அல்லது கெஞ்சி கேட்டல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
I implore you to help me.
நீ எனக்கு உதவுமாறு நான் உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

Since he implored me, I helped him.
அவன் என்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் நான் அவனுக்கு உதவினேன்.

Practice it
எனவே நண்பர்களே! மன்றாடி கேட்டல் அல்லது கெஞ்சி கேட்டல் என்ற அர்த்தத்தில் இந்த IMPLORE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...