Know the word IMPLY...

Word of the day is IMPLY...
Pronunciation
/ɪmˈplaɪ/

Function
The word IMPLY is a verb.

Meaning
to communicate an idea or feeling without saying it directly அதாவது ஒரு யோசனையை அல்லது ஒரு உணர்வை நேரடியாகச் சொல்லாமல் இருப்பது என்று அர்த்தம்.

அதாவது இந்த IMPLY என்ற இந்த வார்த்தையானது ஒருவரிடம் ஒரு விஷயத்தை நேரடியாக வார்த்தையின்  மூலமாக சொல்லாமல் செயலின் மூலமாக சொல்லும்பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். 

எடுத்துக்காட்டாக ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு நல்லதொரு சாப்பாடு சமைத்துக் கொடுக்கணும் என்று ஆசையாக அடுப்பரைக்கு சென்ற மனைவியிடம் இன்று சமைக்க வேண்டாம் வெளியில் போய் சாப்பிடுவோம் என்று கணவன் சொல்லும் பொழுது அதனை மனைவி பாசிட்டிவாகவும் எடுக்கலாம், நெகட்டிவாகவும் எடுக்கலாம்.

அதாவது மனைவிக்கு சரியாக சமைக்க தெரியாது என்று வெளியே சாப்பிட போவோம் என்று சொல்கிறாரோ என்று நெகடிவ்வாக எடுக்கலாம் அல்லது மனைவியுடன் சந்தோஷமாக வெளியே போய் வருவோம் என்று சொல்கிறார் என்று பாசிட்டிவாகவும் எடுக்கலாம். 

இவ்வாறாக ஒரு விஷயமானது நேரடியாக வார்த்தையின் மூலமாக சொல்லாமல் விடப்படும் பொழுது இந்த IMPLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் குறிப்பிடுதல் அல்லது அர்த்தம் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்

In a sentence
I do not imply that you can't do it rather I want you to take rest today.
உன்னால் அதனை செய்ய முடியாது என்று நான் குறிப்பிடவில்லை, மாறாக நீ இன்று ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Supporting him implies that you accept his principles.
அவரை ஆதரிப்பது என்பது அவருடைய கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

Caring for you does not imply that I support your misbehaviour. 
உன்னை கவனித்துக்கொள்வது என்பது உனது தவறான நடத்தையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

Practice it
எனவே நண்பர்களே! குறிப்பிடுதல் அல்லது அர்த்தம் என்ற இடங்களில் இந்த IMPLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...