Know the word INCESSANT...
Word of the day is INCESSANT...
The word INCESSANT is an adjective.
Meaning
Without pause or stop; not ending, especially to the point of annoyance அதாவது இடைநிறுத்தமோ அல்லது நிறுத்தமோ அல்லது முடிவே இல்லாமல் எரிச்சலூட்டுகின்ற என்று அர்த்தம்.
அதாவது INCESSANT என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயம் தொடர்ந்து எரிச்சலூட்டுகின்ற வகையில் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
அதாவது இந்த INCESSANT என்ற இந்த வார்த்தை 100% நெகட்டிவ்வாக பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
அதாவது இந்த INCESSANT என்ற இந்த வார்த்தையை தமிழில் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்வோமல்லவா! அதேபோன்று இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக மழை வராதா என்று ஏங்கி காத்திருப்போம் ஆனால் தொடர்ந்து மழை விழும் பொழுது அது எரிச்சலை உண்டு பண்ணிவிடும். அதேபோன்று வெயில் வராதா என்று ஆசையாக காத்திருப்போம் ஆனால் தொடர்ந்து வெயில் அடிக்கும் பொழுது அது எரிச்சலை உண்டு பண்ணிவிடும் இதேபோன்ற இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தமிழில் இடைவிடாத என்ற அர்த்தத்தில் இந்த INCESSANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஒரு விஷயம் தொடர்ந்து நடைபெற்று எரிச்சலூட்டும் இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
I have to stay inside my house due to this incessant rain.
இந்த இடைவிடாத மழையால் நான் எனது வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.
The incessant barking of the dog gives us sleepless nights.
நாயின் இடைவிடாத குரைப்பு எங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருகிறது.
Practice it
எனவே நண்பர்களே! ஒரு விஷயம் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று எரிச்சலூட்டும் பொழுது இந்த INCESSANT என்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக