Know the word INCRIMINATE...

Word of the day is INCRIMINATE...
Pronunciation
/ɪnˈkrɪm.ə.neɪt/

Function
The word INCRIMINATE is a verb.

Meaning
to accuse or bring criminal charges against அதாவது குற்றம் சாட்டுதல் அல்லது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் என்று அர்த்தம்.

INCRIMINATE என்ற இந்த வார்த்தையானது தமிழில் குற்றம் கூறுதல் அல்லது குற்றம் சுமத்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படவேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் அந்த குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சாட்சி இருக்கும்பொழுது மட்டுமே பயன்படுத்தபட வேண்டிய ஒரு வார்த்தை ஆகும்.

சாதாரணமாக குற்றம் கூறுதல் அல்லது குற்றம் சாட்டுதல் என்ற வார்த்தைக்கு ACCUSE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தலாம். ஆனால் அந்த ACCUSE என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது வலுவான சாட்சி இருக்க வேண்டிய தேவை என்று ஒன்று இல்லை ஆனால் இந்த INCRIMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது வலுவான சாட்சி ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

In a sentence
He did not open his mouth because he thought that he would incriminate himself.
அவர் தன் மீது தானே குற்றம் சுமத்த நேரிடும் என எண்ணி அவர் அவரது வாயை திறக்கவில்லை.

Though he was incriminated by the opposition, he was not punished.
எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டாலும், அவர் தண்டிக்கப்படவில்லை.

Practice it
எனவே நண்பர்களே! குற்றம் கூறுதல் அல்லது குற்றம் சுமத்துதல் என்ற இடங்களில் இந்த INCRIMINATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...