Know the word INSATIABLE...
Word of the day is INSATIABLE...
/ɪnˈseɪ.ʃə.bəl/
Function
The word INSATIABLE is an adjective.
Meaning
a desire or need that is too great to be satisfied அதாவது ஒரு ஆசை அல்லது ஒரு தேவை திருப்தி அடைய முடியாத அளவுக்கு இருத்தல் என்று அர்த்தம்.
INSATIABLE என்ற இந்த வார்த்தையானது ஒரு நெகட்டிவான அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தை போல தெரியலாம் ஆனால் இந்த INSATIABLE என்ற இந்த வார்த்தையை பாசிடிவாகவும் பயன்படுத்தலாம் நெகட்டிவாகவும் பயன்படுத்தலாம்.
அதாவது ஆசைகளை இரண்டு வகைப்படுத்தலாம் அவை ஆன்மீகம் சார்ந்த ஆசைகள் மற்றும் உலகம் சார்ந்த ஆசைகள்.
எனவே INSATIABLE என்ற இந்த வார்த்தையை கொண்டு ஆன்மீகம் சார்ந்த ஆசைகளை பற்றி பேசும் பொழுது பாசிட்டிவாக பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் உலகம் சார்ந்த ஆசைகள் பற்றி பேசும் பொழுது நெகட்டிவாகவும் பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக நாடி நரம்பு எல்லாம் பணம் பணம் என்று நிறைந்திருக்கும் ஒருவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதிலே திருப்தி இருக்காது என்று சொல்லலாம்.
அதுபோல எண்ணம் ஏக்கம் எல்லாமே பதவி பதவி என்று இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு பதவி உயர்வு கிடைத்தாலும் அந்த பதவி தாகம் தீராது என்று சொல்லலாம்.
அதுபோலவே பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியைக் கண்ட ஒரு நபருக்கு எவ்வளவுதான் கொடுத்து உதவினாலும் அந்த தாகம் தணியாது என்று சொல்லலாம்.
இவ்வாறாக இந்த INSATIABLE என்ற இந்த வார்த்தையை பாஸிடிவாகவும் பயன்படுத்தலாம் நெகட்டிவாகவும் பயன்படுத்தலாம்.
தமிழில் மன திருப்தி அடையாத அல்லது தீராத என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்த வார்த்தையை எப்பொழுதுமே insatiable என்று தனியாக பயன்படுத்தக் கூடாது மாறாக insatiable desire, insatiable hunger, insatiable appetite என்றே வாக்கியங்களில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
His insatiable desire for money makes him to work all day.
பணத்தின் மீதான அவனது தீராத ஆசை அவனை நாள் முழுவதும் வேலை செய்ய வைக்கிறது.
Her insatiable hunger for success kept her in the ground all day.
வெற்றியின் மீதான அவளது தீராத பசி அவளை நாள் முழுவதும் மைதானத்தில் இருக்க வைத்தது.
Practice it
எனவே நண்பர்களே! இந்த INSATIABLE என்ற இந்த வார்த்தையை மன திருப்தி அடையாத அல்லது தீராத என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக