Know the word ISLE...
Word of the day is ISLE...
/aɪl/
Function
The word ISLE is a noun.
Meaning
a small island அதாவது குட்டி தீவு என்று அர்த்தம்.
அதாவது பரந்து விரிந்திருக்கிற இந்த பூமியில் கொஞ்சம் நிலப்பரப்புக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறது அதே நேரத்தில் அளவில் மிக பெரியதாக இருக்கிறது அதனைத்தான் நாம் கண்டங்கள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் CONTINENTS என்று அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நிறைய நிலப்பரப்புக்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் அளவில் மிகச் சிறியதாகவும் இருக்கிறது இவற்றைத்தான் நாம் தீவுகள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் ISLANDS என்று அழைக்கப்படுகிறது.
தீவு என்று சொல்வதற்கு ஒரே ஒரு வரையறை தான் இருக்கிறது அது நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட பகுதி என்பதாகும் அப்படிப் பார்த்தால் எல்லா கண்டங்களும் கூட நான்கு பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுதான் இருக்கிறது.
எனவே நண்பர்களே நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு கண்டம் (CONTINENT) ஆகும். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட சிறிய பகுதி தீவு (ISLAND) ஆகும். மேலும் நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட மிகச்சிறிய நிலப்பரப்பு குட்டித்தீவு (isle) ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்.
In a sentence
There are so many beautiful isles around the world.
உலகம் முழுவதும் பல அழகான குட்டித் தீவுகள் உள்ளன.
The isle of Capri is one of the most famous isles in the world.
குட்டித்தீவான காப்ரி உலகின் மிகவும் பிரபலமான குட்டித்தீவுகளில் ஒன்றாகும்.
Practice it
எனவே நண்பர்களே! குட்டித்தீவு என்ற இடத்தில் இந்த ISLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக