Know the word LOATHE...

Word of the day is LOATHE...
Pronunciation
/loʊð/

Function
The word LOATHE is a verb.

Meaning
to feel strong hate or dislike for someone or something அதாவது யார் மீதாவது அல்லது எதன் மீதாவது கடுமையான வெறுப்பை உணர்தல் என்று அர்த்தம்.

அதாவது LOATHE என்ற இந்த வார்த்தையானது உச்சகட்ட வெறுப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

தமிழில் சுத்தமா பிடிக்காது என்று பயன்படுத்தும் இடங்களில் இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக சிலருக்கு சைவ உணவு சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு அசைவ உணவு சுத்தமா பிடிக்காது.
சிலருக்கு இரவு நேரத்தில் சோறு சாப்பிட சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட சுத்தமா பிடிக்காது.
சிலருக்கு கழிவறையை கழுவ சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு வீட்டு வேலையை செய்யவே சுத்தமா பிடிக்காது.

இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் சில விஷயங்கள் சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில மனிதர்களை சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில பொருட்களை சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில இடங்களை சுத்தமா பிடிக்காது. 

எனவே இந்த LOATHE என்ற இந்த வார்த்தையை வெறுத்தல் என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ஒருவருக்கு ஒரு விஷயத்தின் மீது சுத்தமா, அதிகப்படியா, கடுமையா வெறுப்பு ஏற்படும் பொழுது பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He loathed to take care of his own mother.
அவன் தனது சொந்த தாயை கவனித்துக் கொள்வதை வெறுத்தான்.

He loathed to spend time on watching cricket.
அவன் கிரிக்கெட் பார்ப்பதில் நேரத்தை செலவிடுவதை வெறுத்தான்.

Practice it
எனவே நண்பர்களே! ஒருவருக்கு ஒரு விஷயத்தின் மீது சுத்தமா, அதிகப்படியா, கடுமையா வெறுப்பு ஏற்படும் பொழுது இந்த LOATHE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...