Know the word NAUGHT...
Word of the day is NAUGHT...
/nɑːt/
Function
The word NAUGHT is a noun.
Meaning
NAUGHT என்ற இந்த வார்த்தைக்குள் மூன்று அருமையான விஷயங்கள் அடங்கியுள்ளது அவை nothing or complete failure or zero அதாவது ஒன்றுமில்லை அல்லது முற்றிலும் தோல்வி அல்லது பூஜ்ஜியம் என்று அர்த்தம்.
அதாவது இந்த NAUGHT என்ற இந்த வார்த்தையை NOTHING என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம் அதாவது ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக Did you say anything? என்று ஒருவர் கேட்கும் பொழுது No, I did not say anything என்று சொல்லலாம் அல்லது No, I said nothing என்று சொல்லலாம் அல்லது NOTHING என்று மிகவும் Short ஆக சொல்லலாம் அல்லது அதற்கு பதிலாக NAUGHT என்று சொல்லி விடலாம் அதாவது ஒன்றுமில்லை என்று அர்த்தம்.
மேலும் இரு நபர்களை ஒருவரோடு ஒருவரை ஒரு விஷயத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசும் பொழுது ஒருவர் மற்றொருவருக்கு எந்த விதத்திலும் ஒன்றும் இல்லாதவராக இருக்கும்பொழுது NAUGHT என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
அதாவது He is naught for me என்று சொல்லலாம் அதாவது He is nothing for me என்று அர்த்தம் அதாவது அவன் எனக்கு ஒன்றுமில்லை என்று அர்த்தம்.
இந்த comparison ஆனது அறிவின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது அழகின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது பலத்தின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது குணத்தின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது திறமையின் அடிப்படையில் இருக்கலாம். மொத்தத்தில் ஒருவரை ஒரு விஷயத்தின் அடிப்படையில் மற்றொருவருடன் ஒப்பிட்டு பேசும் பொழுது ஒருவர் மற்றொருவருக்கு எந்த விதத்திலும் ஒன்றும் இல்லாதவராக இருக்கும்பொழுது பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக ஒரு முயற்சி அல்லது ஒரு வேலை எந்தவித பலனையும் தராத போது முற்றிலும் தோல்வி என்ற அர்த்தத்திலும் NAUGHT என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.
அதாவது All his efforts came to naught என்று சொல்லலாம் அதாவது அவனது எல்லா முயற்சியும் முற்றிலும் தோல்வியில் முடிந்தது என்று அர்த்தம்.
அல்லது All his plans came to naught என்று சொல்லலாம் அதாவது அவனது எல்லா திட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்று அர்த்தம்.
இவ்வாறாக முற்றிலும் தோல்வி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக NAUGHT is an alternative word for NOUGHT. அதாவது N-O-U-G-H-T என்ற வார்த்தையின் மற்றொரு வடிவம் தான் இந்த NAUGHT என்ற இந்த வார்த்தை.
அதாவது ஆங்கிலத்தில் ZERO என்று சொல்வதற்கு பதிலாக NOUGHT என்று BRITISH ENGLISH இல் பயன்படுத்தப்படுகிறது அதே நேரத்தில் AMERICAN ENGLISH இல் 'OH' என்று பயன்படுத்தப்படுகிறது
அதனால் தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் 007 (zero zero seven) என்ற எண்ணை பிரிட்டிஷ்காரர்கள் NOUGHT NOUGHT SEVEN என்று வாசிப்பார்கள் அதேநேரத்தில் அமெரிக்கர்கள் DOUBLE OH SEVEN என்று வாசிப்பார்கள்.
இவ்வாறாக ZERO என்று சொல்வதற்கு பதிலாக NAUGHT / NOUGHT என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.
Practice it
எனவே நண்பர்களே! nothing or complete failure or zero என்ற இடத்தில் இந்த NAUGHT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக