Know the word OPAQUE...

Word of the day is OPAQUE...
Pronunciation
/oʊˈpeɪk/

Function
The word OPAQUE is an adjective.

Meaning
OPAQUE என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக it means preventing light from traveling through அதாவது ஒளி பயணம் செய்வதைத் தடுத்தல் என்று அர்த்தம்.

அதாவது OPAQUE என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒளி புகாத ஒரு பொருளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக மரக்கட்டை இரும்பு போன்ற பொருட்கள் ஒளி புகாததாக இருக்கிறது.

மேலும் OPAQUE என்ற இந்த வார்த்தையானது not clearly understood  என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் அதாவது தெளிவாக புரிந்து கொள்ள முடியாத என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் பேசும் வார்த்தைகளோ அல்லது ஒருவர் எழுதும் கவிதைகளோ அல்லது கட்டுரைகளோ புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும் பொழுது அந்த இடத்திலும் இந்த OPAQUE என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

எனவே இந்த OPAQUE என்ற இந்த வார்த்தையை தமிழில் ஒளி புகாத அல்லது தெளிவாக புரிந்து கொள்ள முடியாத என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

In a sentence
Even some of the windows in the jail are opaque.
சிறைச்சாலையில் உள்ள சில ஜன்னல்கள் கூட ஒளிபுகாததாக இருக்கிறது.

The curtains that I bought are opaque.
நான் வாங்கிய திரைச்சீலைகள் ஒளிபுகாதவை.

Some of the sentences in her poems are opaque.
அவளது கவிதைகளில் சில வாக்கியங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.

Some of the sentences in his speech are opaque.
அவருடைய பேச்சில் சில வாக்கியங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஒளி புகாத அல்லது தெளிவாக புரிந்து கொள்ள முடியாத என்ற இடங்களில் இந்த OPAQUE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...