Know the word OPULENT...
Word of the day is OPULENT...
/ˈɑː.pjə.lənt/
Function
The word OPULENT is an adjective.
Meaning
expensive and luxurious அதாவது விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான என்று அர்த்தம்.
தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதிசொகுசான என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.
மேலும் OPULENT என்ற இந்த வார்த்தையானது ஒரு நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர்களுக்கு என்று ஒதுக்கி விடப்பட்ட ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
ஏனென்றால் இவர்களிடம் மட்டுமே அதி சொகுசான வாகனங்கள், அதிசொகுசான பொருட்கள், அதிசொகுசான இருப்பிடங்கள், அதிசொகுசான வாழ்விடங்கள், அதிசொகுசான ஹோட்டல்கள் என்று எல்லாமே அதிகப்படியான சொகுசு நிறைந்ததாகவே இருக்கும்.
எனவே இந்த OPULENT என்ற இந்த வார்த்தையானது நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும்போது அவர்களுக்கு நிகரான ஒரு வார்த்தை என்று சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும்.
அதே நேரத்தில் அந்த பணக்காரர்கள் வரிசையில் இல்லாத ஒருவர் அதிசொகுசு நிறைந்த ஒரு பொருளை வைத்திருந்தால் இந்த வார்த்தையானது பணக்காரரை போல அவர் பாசாங்கு செய்கிறார் என்ற தவறான கண்ணோட்டத்தை கொடுத்துவிடும்.
In a sentence
He always lived an opulent lifestyle.
அவர் எப்போதும் அதிசொகுசான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்தார்.
He wanted to show his friends all his opulent cars.
அவர் தனது அனைத்து அதிசொகுசான கார்களையும் தனது நண்பர்களுக்கு காட்ட விரும்பினார்.
Practice it
எனவே நண்பர்களே! அதிசொகுசான என்ற அர்த்தத்தில் இந்த OPULENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக