Know the word MALEVOLENT...

Word of the day is MALEVOLENT...
Pronunciation
/məˈlev.əl.ənt/

Function
The word MALEVOLENT is an adjective.

Meaning
It means causing or wanting to cause harm or evil என்று சொல்லலாம் அதாவது தீங்கு அல்லது தீமையை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்த விரும்புதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுடைய எண்ணம் முழுமையாக பிறருக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியதாக அல்லது ஏற்படுத்த விரும்புவதாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த MALEVOLENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

பொதுவாக ஒரு மனிதனுடைய எண்ணம் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் பொழுது அவனுடைய பார்வை மற்றும் செயல் என எல்லாமே பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கும் ஏனென்றால் மனிதனுடைய அனைத்து செயல்களும் எண்ணத்தில் இருந்து தானே பிறக்கிறது!

மேலும் இப்படிப்பட்டவர்கள் பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர்களாக இருப்பதால் இவர்கள் பிறர் படும் துன்பத்தை பார்த்து, கஷ்டத்தை பார்த்து, வேதனையை பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவர்களாக, திருப்தி அடையக் கூடியவர்களாக இருப்பார்கள்.

எனவே தமிழில் தீங்கிழைக்க கூடிய என்ற அர்த்தத்தில் இந்த MALEVOLENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
His malevolent look scared her like a hell.
அவனது தீங்கிழைக்க கூடிய பார்வை அவளை ஒரு நரகத்தைப் போல பயமுறுத்தியது.

His malevolent activities made others to hate him.
அவனது தீங்கிழைக்க கூடிய செயல்கள் மற்றவர்களை வெறுக்க வைத்தது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தீங்கிழைக்க கூடிய என்ற அர்த்தத்தில் இந்த MALEVOLENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...