Know the word PLUMMET...

Word of the day is PLUMMET...
Pronunciation
/ˈplʌm.ɪt/

Function
The word PLUMMET can be used as verb and noun.

Meaning
to drop swiftly and directly அதாவது விரைவாகவும் நேரடியாகவும் விழுதல் என்று அர்த்தம்.

அதாவது PLUMMET என்ற இந்த வார்த்தையை பல நிலைகளில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம், தங்கத்தின் விலையானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம், காய்கறிகளின் விலையானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம் மேலும் பள்ளிக்கு வர வேண்டிய மாணவர்களின் வருகை மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு விஷயமானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது PLUMMET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் அந்த சரிவானது வேகமாகவும் விரைவாகவும் நடக்கும் பொழுது பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக மேலே தூக்கி வீசப்பட்ட ஒரு கல்லானது அதனுடைய ZERO நிலையை அடைந்து மீண்டும் கீழே நோக்கி வரும்பொழுது எவ்வளவு வேகமாக வருமோ அவ்வளவு வேகமாக சரிவை சந்திக்கும் இடத்தில் PLUMMET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் மிகப்பெரிய சரிவை சந்தித்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The stock market plummeted as soon as it started today.
பங்குச் சந்தை இன்று தொடங்கிய உடனேயே மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது.

Rupees rate against Euro started to plummet. 
யூரோவுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது.

Practice it
எனவே நண்பர்களே! மிகப்பெரிய சரிவை சந்தித்தல் என்ற இடத்தில் இந்த PLUMMET ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...