Know the word PRODIGY...
Word of the day is PRODIGY...
/ˈprɑː.də.dʒi/
Function
The word PRODIGY is a noun.
Meaning
a person, especially a young one, endowed with exceptional qualities or abilities அதாவது விதிவிலக்கான குணங்களை அல்லது திறமைகளைக் கொண்ட ஒரு இளைஞன் என்று அர்த்தம்.
அதாவது இந்த விவேகம், ஞானம், அறிவு, மதிநுட்பம் போன்ற விஷயங்கள் எல்லாம் வயதாக வயதாக ஒருவருக்கு அவர் படித்த படிப்பின் மூலமாகவோ அல்லது அவருக்கு கிடைத்த பல நல்ல அனுபவங்கள் மூலமாகவோ வருவது என்பது நாம் அறிந்ததே.
அதே நேரத்தில் சிலர் இந்த விவேகம், ஞானம், அறிவு, மதிநுட்பம் போன்றவற்றை சிறுவயதிலேயே பெற்றிருப்பதையும் நம்மால் காண முடியும் இப்படிப்பட்ட நபர்களை தான் இந்த PRODIGY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
தமிழில் அசாதாரண திறமை உள்ளவர் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
ஒருவர் இசையில் இளம் வயதிலேயே மிகப்பெரிய அசாதாரண திறமைகளை பெற்றிருக்கும் பொழுது அவரை He is a musical prodigy என்று சொல்லலாம்.
அதேபோன்று ஒருவர் கணிதத்தில் மிகப்பெரிய அசாதாரண திறமைகளை பெற்றிருக்கும் பொழுது அவரை She is a math prodigy என்று சொல்லலாம்.
அதேபோன்றே Rameshbabu Praggnanandhaa சதுரங்க விளையாட்டில் அசாதாரண திறமைகளை பெற்றிருக்கிறார் எனவே அவரை He is a chess prodigy என்று சொல்லலாம்.
Practice it
எனவே நண்பர்களே! அசாதாரண திறமை உள்ளவர் என்ற இடத்தில் இந்த PRODIGY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக