Know the word REJUVENATE...

Word of the day is REJUVENATE...
Pronunciation
/rɪˈdʒuː.vən.eɪt/

Function
The word REJUVENATE is a verb.

Meaning
to revitalize by giving new energy or vigor அதாவது புதிய ஆற்றல் அல்லது வீரியம் கொடுப்பதன் மூலம் புத்துயிர் பெறுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு உயிரினம் (மனிதனாக இருக்கலாம் அல்லது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது தாவரமாக இருக்கலாம்) அதனுடைய முந்தைய வலிமையை இழந்தோ அல்லது இளமையை இழந்தோ இருக்கும் பொழுது அது இழந்த அந்த வலிமையை, அந்த இளமையை, மீட்டெடுக்க முயற்சி செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் அந்த உயிரினம் தனது பழைய நிலையை அடையும் பொழுது இந்த REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு நிறுவனம் நலிவடைந்து அதனுடைய முந்தைய வளமையை இழந்து அதனுடைய நல்ல வியாபாரத்தை இழந்து இருக்கும் பொழுது அது இழந்த அந்த வளமையை, அந்த வியாபாரத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் அந்த நிறுவனம் அதனுடைய பழைய நிலையை அடையும் பொழுதும் இந்த REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு இடம் அதனுடைய முந்தைய அழகை இழந்து பொதுமக்களின் வரவேற்பறை இழந்து இருக்கும் பொழுது அது இழந்த அந்த அழகை, அந்த வரவேற்பறை மீட்டெடுக்க முயற்சி செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் அந்த இடம் தனது பழைய நிலையை அடையும் பொழுதும் இந்த REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்

இந்த அர்த்தங்களில் REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் புத்துயிர் பெறுதல் அல்லது புத்துணர்ச்சி பெறுதல் அல்லது புதுப்பித்தல் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

In a sentence
You can rejuvenate yourself by doing exercise and maintaining good diet.
உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நல்ல உணவை கடைப்பிடிப்பதன் மூலமும் நீங்கள் புத்துணர்ச்சி பெறலாம்.

We need a young and energetic manager to rejuvenate our business.
நமது வணிகத்தை புத்துயிர் பெற செய்ய நமக்கு இளம் மற்றும் ஆற்றல் மிக்க மேலாளர் தேவை.

As the place is rejuvenated, it attracts more crowd now.
இந்த இடமானது புதுப்பிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதிக கூட்டத்தை ஈர்க்கிறது.

Practice it
எனவே நண்பர்களே! புத்துயிர் பெறுதல் அல்லது புத்துணர்ச்சி பெறுதல் அல்லது புதுப்பித்தல் போன்ற இடங்களில் இந்த REJUVENATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...